மாதவிடாய் /பீரியட் / செக்ஸ் என்ற வார்த்தைகளை பேசக் கூடாத சமூக அமைப்பில் , மாதவிடாயின் போது பாவிக்கும் Pad packet ஐ மறைத்து வாங்கும் பெண்களிடத்தில் இன்று நான் பேசும் விடயம் ஆபாசம், அசிங்கம் , அநாகரீகம் என்று வகைப்படுத்தப்படலாம்.
மாதவிடாய் காலத்தில் பேட்கள் மட்டும் தான் ஒப்சனா?
இலங்கை தேசத்தில் ஒரு பக்கட்டின் விலை 450 /= முதல் 750/= வரை உயர்ந்திருக்கிறது.
மாதாந்தம் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1 - 3 பக்கட்டுகள் தேவைப்படலாம். தாயும் இரண்டு / மூன்று மகள்களும் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 6 பக்கட்டுக்கள். மாதம் ஒன்றிற்கு 3000/- செலவு.
சானிட்டரி நாப்கின்களின் விலையேற்றத்தினால் அவற்றைப் பெற முடியாமல் போகும் நமது தாய்மார், சகோதரிகள், நண்பிகள் எதிர்நோக்கும் சுகாதார, சமூகப் பிரச்சனைகள் பற்றி பல்வேறு மட்டங்களில் காத்திரமான உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
சானிடரி பேட் களுக்கு மாற்றாக, மாதவிடாய் கப்களை பயன்படுத்துவது ஒரு மாற்றீடாக பிரபல்யமடைந்து வருகிறது.
Menstrual Cup (மாதவிடாய் கிண்ணம்) . Sanitary Napkin அதாவது பேட் பற்றி நன்கு நீங்கள் அறிந்திருப்பினும் இது புதிதாய் தெரியும். ஒருகப் அண்ணளவாக 800- 1000ரூபாய் வரை கிடைக்கிறது!!!
ஆரம்பத்தில் ஒருவித பயமும் அசௌகரியமும் இருந்தாலும் ஓரிரு மாதங்களில் சரியாகிவிட்டது. பாவிக்கும் சரியான நுட்பங்கள் கைகூடியதும் எதுவித சிரமமும் இல்லாமல் போய்விட்டது.
பெண் உடம்பினுள் செலுத்தப்படுவதால் பலரும் இந்த cups குறித்து அச்சம் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் தனக்கு சரியான அளவை தெரிவு செய்தல் அந்த பயத்தை போக்கிவிடும். அது மட்டுமன்றி வைத்தியதுறையினரின் ஆலோசனைகளும் பயத்தை இல்லாமல் செய்து விடும்.
ஒவ்வொரு மாதமும் 15 -20 pad விரயமாகும் நிலையில், ஒரிரு மாத பேட்களுக்கு செலவு செய்யும் அதே பணத்தில் , கிட்டத்தட்ட 1500-3000 /- க்கு வாங்கும் இந்த cup ஐ 8 முதல் 10 வருடங்கள் வரை உபயோகிக்க முடியும் என்பது, தற்கால பொருளாதார பஞ்சத்தில் மிகவும் ஆறுதல் தரும் அம்சமாகும்.
சாதாரண pads, துணிகளை பாவிப்பதால் ஏற்படும் yeast infections இந்த cups ல் ஏற்படுவதில்லை. அரிப்பு மற்றும் ஏனைய அசௌகரியங்கள் அறவே ஏற்படுவதில்லை.
ஒரே கப்பை 12 மணித்தியாலஙகள் வரை மாற்றத் தேவையில்லை என்பது நீண்ட நேரம் தொழில் செய்யும் பெண்களுக்கும் வசதியானது.
18 வயதிற்கு குறைந்த பெண்களுக்கு S , 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு M, பிரசவித்த பெண்களுக்கு L என Sizeகள் பொருந்தும் என்றாலும், ஒவ்வொருவரது உடற்கூற்று அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீச்சலில் ஈடுபடுபவர்கள், நடனமாடுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் கூட பாவிக்க முடியும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், பாடசாலை ,டியூஷன் வகுப்புகள் என்று முழு நாளும் வெளியில் இருக்கும் மாணவிகள், இல்லத்தரசிகள் என யாவருக்கும் நிச்சயம் இந்த menstual cup ஒரு பரிபூரண தீர்வாக அமையும் .
அது போல, பாவித்து வீசிய Pad கள் நாய்களால் வீதிகளில் இழுத்து வீசப்பட்டு, இனி யாரும் , முகம் சுளிக்கத் தேவையில்லை. ஆடையில் கறையிருப்பதால் யாரும் சிரிப்பார்கள் என்ற பயமும் இனி இல்லை. சுற்றுச் சூழல் மாசடைதல் அறவே இல்லை. (Zero Waste. Environmental friendly)
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மூலம் இத்தகைய Menstrual Cups ஐ வர வழைத்து, வறுமைக்குட்பட்ட பெண்களுக்கு இலவசமாக வழங்கும் செயற்றிட்டமொன்று சகோதர மொழி பேசும் குழுக்களில் காணக் கிடைத்தது.நாமும் அப்படி ஏதாவது செய்யலாம் என நினைக்கிறேன்.
வெளிநாட்டு வாசிகள் - உதவ முடிந்தவர்கள் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளவும். எதிர்கால உலகின் தாய்மையை கௌரவிக்கும் ஒரு செயலாக. இதை நீங்கள் செய்யலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.