Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழகத் திருக்கோயில் வரிசை: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - வல்வையூர் அப்பாண்ணா

பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2016 (வெள்ளிக்கிழமை)
திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் 14 கி.மீ தூரத்தில் உள்ளது “ திருப்பாச்சிலாச்சிராமம் ” எனும் “ திருவாசி ” ஸ்தலமாகும்.
திருப்பாச்சிலாச்சிராமம் = பாச்சில் + ஆச்சிரமம்
பாச்சில் = ஊரின் பெயர்      
ஆச்சிரமம் = கோவில்
 
“ திருவாசிராமம் ” என வழங்கபட்டு வந்த ஊரின் பெயரே “ திருவாசி ” என இந்நாளில் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்த இடமாக இருத்தலினால் “ திருவாசி ” ஸ்தலம் தனிச்சிறப்பான ஸ்தலமாகக் கொள்ளப்படுகிறது. (1) சுந்தரா் பொற்காசு பெற்ற இடம். (2)  கொல்லி மழவன் புதல்விக்கு வந்த முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்து வைத்தது. “ முயலகன் ” நோய் என்பது உணர்வற்ற நிலையில் வரும் ஒருவித வலிப்பு நோய். இங்குள்ள நடராஜர் திருவடியின் கீழ் முயலகனுக்குப் பதிலாக பாம்பு இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
 
ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கியுள்ள கோவிலின் எதிரே குளமும் வன்னி மரமும் உள்ளது. முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிரகாரத்திற்கும் இடைப்பட்ட பரந்த பகுதியில் இருக்கும் நாலுகால் மண்டபம் “ ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ” எனப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில் சம்பந்தர், கொல்லி மழவன் புத்திரியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
கோவிற் பிரகாரத்தினுள் நுழைந்ததும் தம்பத்தடி விநாயகர் – தம்பம் – பீடம் – நந்தி ஆகியவை உள்ள மாபிள் கற்கள் பதிக்கப்பட்ட மண்டபப் பகுதிக்கு  வருகிறோம். நேராக கருவறையில் மூலவர் தரிசனம் கிடைக்கிறது. லிங்கவடிவில் உள்ள மூலவர் “ மாற்றறிவரதீஸ்வரா் ” உருவத்திற் சிறியவராக அனைவருக்கும் அருள் பாலிக்கிறார். சமீவனேஸ்வரா், பிரமபுரீஸ்வரா் எனவும் கருவறைச் சிவனுக்கு வேறு திருநாமங்களும் உண்டு. இந்தத் தம்பத்தடி மண்டபம் “ சுந்தரருக்குப் பொற்கிழி தந்த ஸ்தாபன மண்டபம் ” எனப்படுகிறது.
 
மேற்கு நோக்கியபடி பாலாம்பிகை அம்பாள் சந்நிதி காணப்படுகிறது. நவக்கிரகங்கள், சகஸ்ரலிங்கம் சந்நிதிகள் தனித்தனியாகக் காணப்படுகிறது. உட்பிரகாரத்தின் தென் சுற்றில் தென் கிழக்கு மூலையில் மடைப்பள்ளியும், நால்வர், அறுபத்துமூவர் சந்நிதிகள் உள்ளன. தொடர்ச்சியாக மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் “ கோடி விநாயகரும் ” பிரகாரத்தின் நடுவே முருகனும், வடமேற்கு மூலையில் “ கஜலெட்சுமியும் ” வீற்றிருக்கின்றனா்.
 
 
கருவறையின் கோஷ்டத்தில் தென்புறமாகத் தெட்சணாமூர்த்தியும், மேற்காக அர்த்தநாரீஸ்வரரும், கிழக்காக பிரம்மாவும் உள்ளனா். சண்டிகேஸ்வரா் தனிச்சந்நிதியில் காணப்படுகிறார். சூரியன், பைரவர், நடராஜர் சந்நிதிகளும் தனித்தனியாக உண்டு.
 
அப்பர் பெருமானின் ஒரு பதிகமும், சுந்தரின் 12 பாடல்கள் கொண்ட ஒரு பதிகமும், ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் “ ஷேத்திர வெண்பா ” மூன்று பாடலும் உட்பிரகாரச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.
 
கொல்லி மழவன் தனது பெண் குழந்தையை “ முயலகன் ” எனும் உடல் நோய் வருத்தியதால் பெரிதும் வருந்தித் தளர்ச்சியடைந்தான். எந்த வழிமுறையிலும் அந்நோய் நீங்கப் பெறாமையால் அப்பெண்ணை இறைவனின் திருக்கோவில் கொண்டு வந்து சேர்த்தனா். திருஞானசம்பந்தர் “ திருப்பாச்சிலாச்சிராமம் ” வருவதை அறிந்த கொல்லி மழவன் நகரத்தை அலங்கரித்து சம்பந்தர் வரும் வழி சேர்ந்தான்.
 
இந்தச் சந்தர்ப்பத்தை பெரிய புராண நாயகரான சேக்கிழார் பெருமான் தமது பாடலின் ( பாடல் இல. 2212 ) இறுதி வரியில், “ வானவர்நா யகர்மகனார் வருமுன்பு தொழுதணைந்தான் மழவர்கோன் ” என்கிறார். “ கொல்லி வழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் மகனார் திரு முன்பு தொழுதபடியே சேர்ந்தான் ” என்பது பொருள். “ மகனார் ” எனக் கூறியமையானது, உமாதேவியாரின் திருமுலைப்பால் உண்ட காரணத்தால் ஞானசம்பந்தா் சிவபெருமானின் “ மகன்  ” எனப்பட்டார் எனக் கொள்க.
 
பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலைமென் சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக் கதுமெனப் பார்மிசை நின்றெழுத்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து பொருவலித் தாதை புடையணைந்தாள்.
 
 
சம்பந்தா் திருப்பதிகம் பாடி முடிந்ததும் மழவன் மகள் நோய் நீங்கப்பெற்று தன் தந்தை பக்கத்தில் வந்து நின்றாள். திருவானைக்கா திருத்தலத்தை பாடித் துதித்த பின் சுந்தரா் திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சென்றடைந்து, அங்குள்ள ஈசனிடம் தமக்கு பொற்காசு தரும்படி வேண்டுகோள் வைக்கிறார். சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவருக்கு பொன் முடிப்பு வழங்குகிறார்.
 
மேற்குறித்த இரு அற்புதங்களும் நிகழ்ந்த இந்த “ திருவாசி ” திருக்கோவிலை அனைவரும் தரிசித்து அருள் பெறுவார்களாக.
 
“ ஒருமையேயல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க்கு அடிமையுமானேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிராமத் தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலாது இல்லையோ பிரானார் ”
-சுந்தரா்-
 
நன்றி : ஞானச்சுடர் கார்த்திகை மலர் 2015
 
அடுத்தவாரம்: “ திருப்பைஞ்ஞீலி ” எம்பெருமான் திருநீறணிந்த அந்தணராகி கட்டுச் சாதத்துடன் காத்திருந்து அப்பரின் பசி போக்கிய திருத்தலம் “ திருப்பைஞ்ஞீலி ”

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2023>>>
SunMonTueWedThuFriSat
   123
4
5
6
7
8910
11
121314
15
16
17
18
19
20
21
22
2324
25
262728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai