Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை - 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் எனும் கப்பலானது 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக, எம்மால், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
இவ் ஓவியப்போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து ஓவியங்களும் ஆவணப்படுத்தப்படுவதுடன், போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 ஓவியங்களிற்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இவ் ஓவியப் போட்டியின் நோக்கம் மறைந்திருக்கும் அன்னபூரணி, மற்றும் அதனுடன் தொடர்புடைய வியக்கத்தக்க விடயங்களை வெளிக்கொணர்வதாகும்.
மேற்கொண்டதற்கமைவாக, ஓவியப்போட்டியின் பிரதான கருப்பொருள் அன்னபூரணிக் கப்பலாக இருக்க வேண்டும். ஆனாலும் வரையப்படும் ஓவியத்தில் அன்னபூரணியுடன் தொடர்புடைய பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொள்வது சிறப்பாகக் கருதப்படும். அவையாவன,
கப்பல் கட்டப்பட்ட இடம்
கப்பல் கட்டப்படுதல்
கப்பலைச் செலுத்திய சிப்பந்திகள் (தண்டையல்கள்)
கப்பலின் உரிமையாளர் C Robinson
கப்பல் சென்றடைந்த துறைமுகங்கள்
கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை வந்தடைந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு
இத்துடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைச் செய்திகள் போன்றன.
போட்டி பற்றிய விபரங்கள்
1. போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம்
2. ஓவியம் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 15th July 13
3. அனுப்ப வேண்டிய முகவரி
a) email - valvettithuraiorg@gmail.com ( Scanned attachment)
4. ஓவியம் A4 அளவிலினில் அடக்கப்படவேண்டும்
5. ஓவியத்தின் வலது பக்கக் கீழ் மூலையில், உங்கள் பெயர், வயது, மற்றும் விலாசத்தை சிறிதாகக் குறிப்பிடவும் ,
அத்துடன் வேறாக உங்கள் முழுப்பெயர், விலாசம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்களைக் குறிப்பிடவும்.
6. போட்டியாளர்கள் தமது புகைப்படத்தையும் தனியாக இணைத்துக் கொள்வது விரும்பத்தக்கது.