அன்னபூரணி அமெரிக்கா சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு இன்று ஆகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு இன்றாகும். (பசுபிக் திகதி 01 ஆவணி 13).
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், Willaim Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
பெயர்
Florence C Robinson
ஆரம்பப் பெயர்
அன்னபூரணியம்மாள்
S. V
Sailing vessel (Categorization under Collision egulations of International Maritime organization)
கட்டப்பட்ட வருடம்
1929?
கட்டப்பட்ட இடம்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா
கட்டியவர்கள்
கப்பல் கட்டுவதில் வல்லுனர்களான சில வல்வெட்டித்துறை வாசிகள்
வகை
Brigantine வகை, அல்லது பிரசித்திபெற்ற ‘British frigate’ வகையானது
அளவுகள்
நீளம் 89 - 90 அடி, ஏனையவை பற்றி அதாவது அகலம், GRT, NRT போன்றவை பற்றி சரியாகத் தெரியவில்லை
ஆகக்கூடிய வேகம்
18 கடல் மைல்கல், (செங்கடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஆரம்ப உரிமையாளர்
செட்டி குடும்பம், தமிழ் நாடு, இந்தியா
பிந்திய உரிமையாளர்
William Albert Robinson, USA
உள்ளூர் பெயர்
சலங்கு, அல்லது தோணி
பொதுவான பாவனை
உள்ளூர் மற்றும் கடல் கடந்த வாணிபம் (coastal and or foreign going)
பயணித்த வருடம்
1936-1938
மொத்தம் பயணித்தவர்கள்
6 பேர், தண்டையல்கள் என அழைக்கப்படுகின்றார்கள்,
வல்வெட்டித்துறைச் சார்ந்தவர்கள், மூவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்கள். சைப்ரசில் இருந்து அமெரிக்காவைச் சார்ந்த இன்னுமொரு Capt பயணித்துள்ளார்.
கடைசியாக பயணித்த துறைமுகம்
Gloucester, America
பயணித்த பாதை
VVT – Colombo – Arabian sea – Red sea – Suez canal – Cyprus –
மேலே கூறப்பட்டுள்ளவைதான், அன்னபூரணியம்மாள் எனும் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்குச் சென்றிருந்த ஒரு கப்பலின் சிறு விபரம்.
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், William Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
அன்னபூரணியம்மாள் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை அடைந்ததின் 75 ஆவது வருடம் 01st Aug 2013.
அன்னபூரணியின் முழுமையான வரலாறு பற்றி பெரும்பாலான வல்வெட்டித்துறை வாசிகளுக்கே தெரியாதது என்பது தான் கவலையளிக்கும் உண்மை.
William Albert Robinson இந்த அன்னபூரணியை அன்று வாங்காது விட்டிருந்தால், வல்வெட்டித்துறையில் முன்பிருந்திருந்த, பிரமிக்க வைக்கும் இந்தக் கப்பல் கட்டுமானக் கலைகளும், இக்கப்பல்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்த (Foreign going) வாணிபத்திற்கு செலுத்தியிருந்த மாலுமிகளையும் (தண்டையல்கள் ) பெரிதும் அறியாமல் போக நேர்ந்திருக்கும்.
இப்பொன்னாளில் கப்பல்களைச் செய்திருந்த கலைஞர்களையும், தண்டையல்கள் மற்றும் William Albert Robinson ஆகியோரை ஒருகணம் நினைவு கூர்ந்து, அன்னபூரணி மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட விபரங்களை நாம் வெளிக்கொணரவேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.