முதன்முறையாக வல்வையில் அரும்பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2018 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் 'அரும் பொருட்கள் கண்காட்சி' இன்று ஆரம்பமானது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவரும் மாவட்ட வைத்திய அதிகாரியுமான Dr.சுரேந்திரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விருந்தினர்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.நந்தகுமார் மற்றும் கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணியளவில் கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வுகள் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
கண்காட்சி இன்று மாலை 05.00 மணி வரை இடம்பெறுகின்றது.
வல்வையின் ஆவணக் காப்பாளர்கள் திரு. மீனாட்சிசுந்தரம மற்றும் திரு & திருமதி நகுலசிகாமணி ஆகியோரினால் பேணிப் பாதுக்காக்கப்பட்டுவரும் அரிய பல ஆவணங்கள் இன்றைய கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
தனிப்பட்ட ஆவணக் காப்பாளர்களின் அரும் பொருட்கள் கண்காட்சி யாழில் இதுபோன்று இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் மேலும் வளப்படுத்தும் நோக்கிலேயே வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் குறித்த இந்தக் கண்காட்சி ஏற்ப்பாடு செய்யப்படுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.