பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான குறித்த விண்ணப்ப முடிவுத் திகதியானது எதிர்வரும் மே 31 ஆம் திகதி முடிவடையும் நிலையில், வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களை கருத்திற்கொண்டு மேலும் 10 நாட்களுக்கு விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். க.பொ.த. சா/த பரீட்சைகள், எதிர்வரும் டிசம்பர் 06 தொடக்கம் டிசம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு அரச இணையதள ஊடங்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.