மாபெரும் “Beach Volleyball” ற்கு தயாராகும் வல்வை ரேவடி கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2014 (வியாழக்கிழமை)
நாளை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியானது வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், இப்போட்டியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 20ற்கு மேற்ப்பட்ட வீரர்,வீராங்கனைகள் பங்குபெற்றுகின்றார்கள்.
இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக வெளி மாவட்டத்திலிருந்து வருகைதந்துள்ள வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிற்ப்பாளர்கள் வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்திலும், வல்வை றோமன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்திலும் இன்று இரவு தங்கியுள்ளனர்.
இப்போட்டிகளையொட்டி ரேவடி கடற்கரை மைதானம் தயார்படுத்தப்பட்டுவருவதை படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.