எதிர்வரும் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாவீரர் நினைவேந்தலானது வடமாராட்சி மாவீரர் துயிலும் இல்லமான எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதால் , மாவீரர் தினம் வல்வெட்டித்துறை பொதுப் பூங்காவில் (முன்னர் புலேந்திரன் மற்றும் குமரப்பா ஆகிய பன்னிருவர் மற்றும் கிட்டு ஆகியோரின் தூபிகள் அமைந்துள்ள இடம்) இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வையோட்டி வடமாரட்சி வடக்கின் பிரதான பகுதிகளான பருத்தித்துறை, நெல்லியடி, தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வடமாரட்சி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
நான்கு மணிக்கு பேருந்துகள் புறப்பட்டு தீருவிலை வந்தடைந்து அங்கு 5 மணியளவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடைபெற்று 5.30 மணிக்கு தீருவில் சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 6.10 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் தொடர்ந்து மாவீரர் துயிலுமில்லப் பாடல் இசைக்கப்படும் எனவும் அர்விக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.