அண்மையில் வெளியான ‘அதிபர்’ என்னும் தமிழக திரைப்படம் கட்டாயமாக இலங்கைத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அதிலும் குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகள் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாகும்.
2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை இலங்கை – கனடா நம்மவர்களிற்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் கதையானது திரைக் கதைக்கு ஏற்றவாறு இலங்கை – கனடா என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு – கனடா என மாற்றப்பட்டுள்ளது. தமிழக சினிமாத் துறை சார்ந்தவர்களால் அதிலும் குறிப்பாக பிரபல்யமான ஜீவன், ரஞ்சித், தம்பி ராமையா, முத்துக்குமார், விவேகா, கனல் கண்ணன் என நீளும் பட்டியலுடன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நம் எல்லோர் காதுக்கும் எட்டிய பண மோசடிகளில் ஒன்றைக் கருவாக கொண்டுள்ளது இந்த ‘அதிபர்’ திரைப்படம்.
யாழின் பிரதான அடையாளமான நல்லூர் முருகனுடன் கதை தொடங்குவதுடன், நாயகனும் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனக் காட்டப்பட்ட போதும், சம்பந்தப்பட்டவர்கள் வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் தான் என்பதை 2 இடங்களில் மிகத் தெளிவாக ‘வல்வெட்டித்துறையைச் சாரந்தவன் நான்’ என ஒலிக்க ஒளிக்க விடுவதன் மூலம் காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பிரபாகரன் சார், இயக்கம், LTTE என்ற பதங்களும் வரத் தவறவில்லை. கதை திரைக்கதைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளதால் பாத்திரங்கள் சற்று மாறுபட்டிருந்தாலும், கதை நம்முடையது தான் என்பதில் ஐயமில்லை.
கீழே காட்சியில் ஏமாந்த நாயகன், தன்னை ஒரு வல்வெட்டித்துறை வாசி எனக் குறிப்பிடும் ஒருவர் மற்றும் வில்லன் ஆன ஹீரோ ஆகிய மூவர் உள்ளனர்.
‘சட்டைப் பொக்கற்றுக்குள் எவ்வளவு காசு இருக்கின்றது’ எனக் கேட்கும் வில்லன் ‘தனக்கு 1டொலரே போதும்’ என 1 டொலரை மட்டும் எடுக்கும் காட்சி.
கோடிகள் செலவழித்து படம் எடுக்கும் அளவிற்கு ஒருவர் பணத்தை இழந்து, தனது கடும் ஆதங்கத்தை வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது இப்படத்தின் மூலம் தெளிவாகின்றது.
குறித்த 2 நிமிடக் காணொளி வேறாக இணைக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.