PCR 3 – Tread Mill Test செய்ய லங்கா ஹொஸ்பிடல் உள் நுழைவதற்காக
PCR 4 – கப்பல் ஏறுவதற்கு முயற்சி,
PCR 5 – கப்பல் ஒரு நாள் தாமதம் என்ற படியால் அடுத்த நாள் – இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் தடை போட, கப்பல் முயற்சி பின்போடப்பட்டது.
PCR 6 - கப்பல் ஏற இரண்டாவது முயற்சி – கொரொனா தொற்று உறுதி PCR 1 -
PCR 7 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்காக ஆண்டிஜன்
PCR 8 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – முதலாவது சோதனை
PCR 9 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – இறுதிச் சோதனை. முடிவு தாமதம் ஆனதால் காலிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பல்
PCR 10 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்காக ஆண்டிஜன்
PCR 11 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – முதலாவது சோதனை
PCR 12 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – இரண்டாவது சோதனை, கப்பல் தாமதம்
PCR 1 3- கப்பல் ஏற நான்காவது முயற்சி – மூன்றாவது சோதனை
PCR 14 – நியூயோர்க் வந்து, இங்கு கப்பல் ஏற முன் மீண்டும் சோதனை
மேலே உள்ள தனிமைப் படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனை நான் இந்த முறை கப்பலால் இறங்கி மீண்டும் ஏறுவதற்கு இடையில் இடம்பெற்றவையாகும்.
இலங்கையில் இவ்வாறு அதிகம் தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் அகப்பட்ட நபர் நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தப் பக்கத்தை எழுதத் தூண்டியதன் காரணம் வலி தான்.
மாலுமிகள் ஏற்கனவே கடலில் பாதி வாழ்க்கையை தொலைத்து, மேற்கூறியவாறும் தமது ஓய்வு நாட்களில் பாதியை கழித்து விடுகிறார்கள்.
பண விரயம் இன்னொரு பக்கம்.
அண்மையில் சக மாலுமி ஒருவர் கூறினார் ‘தண்ணீரில் உழைக்கும் பணம் தண்ணீர் போலவே கரைந்து போய்விடும்’ என்று. கிட்டத்தட்ட உண்மை போலும்.
தனிமைப்படுத்தலில் இருந்த பொழுது லண்டனில் உள்ள நண்பன் ஒருவனுடன் பேசும் பொழுது, “தான் இப்பொழுது டாக்ஸி ஓட்டுவதில்லை என்றும், அரசாங்கம் ‘படி’ தருகின்றது” என்றும் கூறினார்.
இங்கு இலங்கையிலும் அரச ஊழியர்கள் சம்பளத்தில் குறைபாடு இல்லை. தனியாருக்கு ஸீரோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
பொது மக்களுக்கும் அப்பப்ப அரச மற்றும் புலம் பெயர் நிவாரணங்கள்.
ஆக மொத்தத்தில் மாலுமிகள் போன்று சில வகையினர் தான் –Ve ற்குத் தள்ளப்படுகின்றார்கள். இது ஒன்றும் பொறாமையல்ல. மாலுமிகளின் புலம்பல்
ஆனாலும் பிசிஆர் சோதனை வலி தரவில்லை - அர்ஜூனுடன் நடித்த ஒரு படத்தில் வடிவேல் ‘நீ அடித்ததற்குப் பின்னர் இந்த உடம்பு மரத்துப் போய் எத்தனை அடி என்றாலும் தாங்கக் கூடியவாறு உள்ளது எனக் கூறுவார். அதுபோல் பிசிஆர் பரிசோதனையில் நானும். பிசிஆர் செய்யும் பொழுது செய்பவர் தான் சற்றுக் கவனமாக இருப்பார். நான் சாதாரணமாகவே இருந்து விடுகின்றேன்.
ஆனாலும் இவற்றில் ஒரு விடயம் எதிர்பார்க்காத ஒன்று தான். அதாவது கொழும்பிலேயே வாழ்ந்து கொண்டு Taj Samudra, Hilton போன்ற கொழும்பு ஹோட்டல்களில் தங்கியது தான்.
வல்வையைச் சேர்ந்த சக மாலுமி ஒருவர், தென்அமெரிக்காவில் கப்பலால் இறங்கி பிசிஆர் செய்ய – சக மாலுமிக்கு கொரொனாவாக அவரும் 14 நாள் தனிமைப்படுத்தல். பின்னர் இங்கு வரவென்றால் தென் அமெரிக்காவின் சில நாடுகளுக்கு இலங்கை தடை.
சில நாட்கள் கழிந்து, அவர் எகிப்து போய் அங்கு 14 நாட்கள் தனிமைப் படுத்தலில் இருந்து மீண்டும் இலங்கை வந்து 7 நாட்கள் தனிமைப் படுத்தலில் இருந்து வீடு வார கிட்டத்தட்ட 1 ½ மாதம் ஆகி விட்டது.
இனிமேல் மீண்டும் இவர் கப்பல் ஏற முன்னர், நான் மேலே எனக்கு குறிப்பிட்ட கணக்கை இவருக்கு சேர்க்க ‘எப்படி இருந்த நான் இப்படி போய் விட்டேன்’ என்ற நிலமைக்கு போய் விடுவார்.
இப்படித்தான் நகர்கின்றது மாலுமிகளின் துயரம் கலந்த வாழ்க்கை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.