Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (55) – Whatsapp குழுமங்கள்

பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2020 (வியாழக்கிழமை)

நெடியகாட்டு குப்பையை எடுத்து வேம்படியில் கொட்டுவது,  அதே குப்பையை வேம்படியிலிருந்து எடுத்து சந்தியில் கொட்டுவது, சந்தியிலிருந்து எடுத்து மதவடியில் கொட்டுவது, மதவடியிலிருந்து ஆலடியில் கொட்டுவது, ஆலடியிலிருந்து தீருவிலில், தீருவிலிருந்து வேவிலில், பின்னர்  வேவிலிருந்து நெடியகாட்டில், மீண்டும் நெடியாகாட்டிலிருந்து .............. என்ற வகையில் விடயங்கள் கொட்டப்படும் அல்லது பகிரப்படும் தளங்களாகத்தான் What’s app குழுமங்கள் (Whatsapp Groups) உள்ளன என, அண்மையில் ஒருவர் கருத்தோவியம் ஒன்றை வெளியிட்டார். 

மாலை நேரங்களில் அம்மன் கோவிலடியில் உள்ள எமது வீட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை பக்கமாகச் சென்றால், அம்மன் கோவிலடி, மதவடி, சந்தி, ரேவடி கஸ்டம்ஸ் வீதி, வேம்படி என பல இடங்களில் ஆண்கள் சம்பம் வைப்பதை பார்க்கலாம். இது எமது ஊரில் மட்டும் நிகழும் ஒரு  நிகழ்வு அல்ல.

இவ்வகைச் சம்பங்களின் நவீன காலத்துக்கு தகுந்தாற்போலேயான  ‘எலெக்ற்றோனிக் வேர்ஷன்’ தான் இந்த Whatsapp குழுமங்கள்  (Whatsapp Groups) போல் எனக்குத் தெரிகின்றது. பெண்மணிகளும் ஆங்காங்கே இக் குழுமங்களில் சேர்க்கப்பட்டிருப்பது சற்று விசேடம்.

Whatsapp, Facebook என்று உச்சரிக்காத நாள் இன்று இல்லை என்றாகிவிட்டது.

உணவு, உடை, உறையுள், Whatsapp, Facebook என்றாகி விட்டது வாழ்க்கை.

ஒரு நாளைக்கு ஒரு ரூபா உழைக்கிறோமோ இல்லையோ ஒன்றுக்கு மேற்பட்ட Whatsapp குழுமங்களில் உறுப்பினர்களாக உள்ளோம்.

ஒழுங்காக ஒரு வேலையத் தேட முடியாத – வேலையைச் செய்யாத பலர், Whatsapp இல் அட்மின். சிலர் ஒன்றுக்கு மேல் அட்மின்.

‘தான் மூன்று Whatsapp குழுமங்கள் தொடங்கி அவற்றை அட்மின் ஆக நிர்வகித்து வருவதாக’ நண்பன் ஒருவன் கூறினான். அப்படி அவன் கூறும் பொழுது அவனது கன்னங்களில் ஒரு பூரிப்பு.

சில தினங்கள் முன்பு கனடாவிலிருந்து உறவினர் ஒருவர் கதைக்கும் பொழுது ‘என்ன ஆதவன் நீங்களும் Whatsapp குழுமம் ஒன்று தொடங்கி அதில் அட்மின் ஆக உள்ளீர்களா’? என்று வினவினார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், நான் உறுப்பினராக சேர்க்கப்பட்ட சில Whatsapp குழுமங்களுக்குள் சென்று பார்த்தபொழுது, ‘நானும் 2 குழுமங்களில் அட்மின் ஆக உள்ளேன்’ எனத் தெரியவந்தது. எனது கன்னங்களும் பூரித்துப் போய் விட்டன!.

ஒரு மேடையில் ஏராளமான பேச்சாளர்கள்., அவர்களின் பேச்சக் கேட்க அவர்கள் முன்னால் ஓரிருவர் மட்டும் அமர்ந்து இருப்பது போல் - சில குழுமங்களில் 52 பேர்களில் 50 பேர் அட்மின்கள்.

சில குழுமங்களில் வட கொரியாவின் ஒரு வழி ஆட்சி போல் ஒரே ஒரு அட்மின் தான் அத்துடன் ‘Only Admin can post and edit.

பலர் ஏராளமான குழுமத்தில் இருக்கின்றார்கள். சிலருக்கு ‘தாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல குழுமங்களில் ‘Add’ பண்ணப்படும் பொழுது அதாவது உறுப்பினராக சேர்க்கப்படும் பொழுது - ‘ஏதோ சமூகத்தில் தங்களின் இமேஜ் கூடுவது போல் ஒரு உணர்வு’.

நண்பன் ஒருவனின் கைத் தொலைபேசியின் Whatsapp பக்கத்தில் நிறைய பச்சை நிறத்தில் – அதாவது கிளிக் செய்யப்படாமல் இருந்தது. ‘நிறைய செய்திகள் உனக்கு உள்ளதே, வாசிக்கவில்லையா’? எனக் கேட்க ‘இவை எல்லாம் டைம் பாஸ் மட்டர்’ என்றான் – ‘நேரம் வரும் பொழுது மட்டும் தட்டுவானாம்’.

புதிதாக தொடங்கப்பட்ட குழுமம் (தளம்) ஒன்றைத் திறந்து பார்த்தால் அங்கிருந்து ஓடியவர்கள் தான் (Left) முதலில் தென்படுவார்கள். என்ன செய்வது ஒருவர் எத்தனை கட்சியில் தொண்டராக இருப்பது.

ஏராளமான கட்சிகள். தொண்டர்களுக்கு தட்டுப்பாடு.

காலையில் விடிய எழும்பியவுடன் போனை திறந்து Whatsapp கொசிப்புக்களை ருசி பார்த்துக் கொண்டிருக்க, மனைவி நினைப்பார் ‘அத்தான் ஏதோ படு பிஸியாக உள்ளார்’ என்று.

இப்பொழுது மனைவிமாருக்கும் Whatsapp அத்துப்படியாகி வருகின்றது.

Whatsapp ஐ கடந்த 3 வருடம் முன்பு பாவிக்க தொடங்கினேன். Face book அதற்கு ஒரு சில வருடங்கள் முன்பு. எனது வாசிப்பு பழக்கம் கடந்த 2,3 வருடத்தில் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு ஒரு சொல்லுக்காவது அகராதியை திறக்கும் நான், கடந்த சில மாதங்களில் அகராதி பக்கமே சென்றது இல்லை. எழுத்துப் பழக்கம் குறைந்து விட்டது. இவ்வளவுக்கும் நான் FB, Whatsapp போன்றவற்றுக்கு அடிமையாகக் கூடாது என்பதில் கவனமாக இருந்தும் கூட.

Whatsapp குழுமங்களில் அடிக்கடி தென்படுபவை – RIP, Happy Birth day. இவற்றைப் பார்த்து சலித்துப்போய்விட்டது.

பிரிவுத்துயரின் போது நேரில் சென்று ஆறுதல் கூறுவேண்டும். அல்லது நேரிடையாக போனில் ஆறுதல் கூற வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் நேரடியாக சம்பந்தப்பட்டவருக்கு ஒரு குறுஞ்ச்செய்தியை அனுப்பவேண்டும். அதைவிடுத்து குழுமங்களில் RIP போடுவது தொடர்கிறது. வேடிக்கையான விடயம் என்னெவெனில் ஒரு பிரிவுத்துயருக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட  இடங்களில் ஒரே நபர் RIP போடுவது.

படித்த உயர் மட்டத்தில் உருவாக்கப்படும் பல குழுமங்களில் கூட குழுமத்தின் குறிக்கோள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு இவற்றை மட்டும் தான் போஸ்ட் செய்யுங்கள் என்று கூறியும் கூட, இதைக் கண்டு கொள்ளாமல் கண்டதையும் போஸ்ட் செய்கிறார்கள்.

மகள்மாரின் வகுப்பு ஆசிரியைகளால் பாடசாலை தேவை நிமித்தம் உருவாக்கப்பட்ட குழுமங்களில் கூட கண்டதையும் போஸ்ட் செய்கிறார்கள்.

இதன் காரணமாக பல குழுமங்கள் ‘Admin only can post’ ற்கு மாற வேண்டிய சூழ்நிலை.

சிறு வயதில் விடிய எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, சாமி கும்பிட்டு, தேநீர் குடித்த பழக்கம் இன்றைய Whatsapp கலாச்சாரம் வரும் வரை தொடர்ந்தது. இப்பொழுது விடிய எழுந்தவுடன், சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்கு பின்,  தூங்குவதற்கு முன் , தூக்கத்தில், நின்ற படி, நடந்த படி என்று......... Whatsapp, Face book ற்கு மாறி விட்டோம். முன்னர் இவை போன்ற விடயங்கள் பணக்காரர், படித்தவர் என்ற வர்க்கத்தினரை மட்டும் பிடித்திருந்தது. தற்பொழுது இவை கொரோனா மாதிரி எதுவித பாகு

பாடுமின்றி சகலரையும் தொற்றிவருகின்றது.

யாழில் இருந்து வெளிவரும் சகல பத்திரிக்கைகளும் பலரால் குழுமங்களில் பதிவேற்றப்படுகின்றன. எத்தனை பேர் அவற்றைப் படிக்கிறார்கள்?.

பலரிடம் கேட்டேன். ஒருவர் கூட ஒரு பத்திரிக்கையைக் கூட ஒரு நாளும் முழுமையாக படித்தாகக் கூறவில்லை.

வல்வை சார் Whatsapp குழுமங்கள்

ஏராளம்

‘சர்வதேச வல்வை ஒன்றியம்’ என்ற ஒரே பெயரில் மட்டும் 3 குழுமங்கள் முன்பு.

பலவற்றில் இருந்தும் விலகிவிட்டேன். அண்மையில் தொடங்கப்பட்ட சிலவற்றில் ‘நீடித்துப் பார்த்தால் என்ன’ என்று தொடர்கின்றேன்.

‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பார்கள். இங்கு புதிதாக தொடங்கப்பட்ட தளங்களில் ‘பழைய மொந்தைகளில் பழைய கள்’ தான்.

தமது அஜெண்டாக்களுக்கு ஏற்றவாறு தமக்கு ஏற்ற உறுப்பினர்களைச் சேர்த்து பலர் குழுமங்களை உருவாக்குகின்றார்கள். சிலர் தம்மை – தமது எதிர் காலத்தை வளர்கும் நோக்கில் உருவாக்குகின்றார்கள். சிலர் வேலை, வெட்டி இல்லாமல் உருவாக்குகின்றார்கள். சிலர் நற் குறிக்கோளுடன் உருவாக்குகின்றார்கள்.

ஆனால் நல்ல தேங்காயை பார்த்து வாக்குவதைப் போல் (அதுவும் சுப காரியங்களுக்கு)  ‘எது தகுந்த குழுமம்’ என்று பலருக்கும் புரியவில்லை.

வல்வை சார் Whatsapp குழுமங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, விஜய் தொலைக் காட்சியில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் விஜய்’ என்பது போல்....

‘பல குழுக்களாக நாங்கள் பிரிந்து சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இனியாவது சண்டைகளை நிறுத்தி  எல்லோரும் ஒற்றுமையாக பயணித்து ஊர் முன்னேற்றத்துக்கு பாடுபடவேண்டும்’ என்ற தொனியில் அமைந்த அறிவுரைகள் அடிக்கடி போஸ்ட் செய்யப்படுகின்றன.

Whatsapp குழுமங்கள் தொடங்க்கப்பட்டதிலிருந்து, முன்னர் அவ்வப்போதும் அண்மைய காலங்களில் அடிக்கடியும் பகிரப்படும் ஒரு விடயமாக மேற்குறித்த விடயம் உள்ளது.

கையை உயர்த்தி சிலர் லைக் போடுவதுடன் விடயம் முற்றுப் பெற்று விடுகின்றது.

நான் பார்த்த வல்வை சார் Whatsapp குழுமங்கள் எதிலும், ஊர் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆக்க பூர்வமான செயற்திட்டமும் முன் எடுக்கப்படவில்லை. (நிவாரணம், கோயில் திருவிழா என்ற பெயரில் நிதி சேகரித்ததை தவிர).

பெயர்தான் வல்வை தளங்கள். பகிரப்படுபவை எல்லாம் Whatsapp ற்கே உரிய Forward காணொளிகள் , போட்டோக்கள், நியூஸ் லிங் போன்றவற்றை தான். இடைக்கிடையே ஊர் விடயங்கள். ஆர்ம்பிக்கப்படும் ஊர் விடயங்கள் இறுதியில் தனி நபரை தாக்கி முற்றுப் பெற்று விடுகின்றன. 

அண்மையில் வல்வை சார் Whatsapp குழுமங்களில் நன்றாக நாறியது ‘கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா பிரச்சனை’ தான். ‘கசடதபற’ கூட தாராளம், கொரொனா போனஸ் போல் காணொளி வடிவிலும் வேறு.

தவறான வார்த்தைப் பிரயோகங்கள், ஒருவருடன் கதைக்கும் பொழுது அவர் அறியாமல் அதை ஒலிப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் அதை பதிவிடல், குடும்ப உறுப்பினர்களை தாக்கி எழுதுதல் என குறித்துக் காட்டக் கூடிய பாரதூரமான சம்பவங்கள் தொடர்ந்து குழுமங்களில் இடம்பெற்று வருகின்றன.

சிலர் மற்றவரின் எழுத்து மொழியை கிண்டல் செய்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுவதை கிண்டல் செய்வது மிக அபத்தம் போல் எனக்குத் தென்படுகின்றது. மற்றவரின் ஆங்கில மொழியை கிண்டல் செய்யும் அளவுக்கு எமது குழுமங்களில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் எவரேனும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறு மொழி வாதம் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.  குறிப்பாக ஆங்கிலம் மொழியாக உள்ள நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள ஒரு சிலருக்கு தாம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதையும், அங்கேயே பிறந்த தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக உரையாடுவதையும் கொண்டு ஒரு தவறான முடிவுக்கு வருகின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் தமிழில் நன்றாக உரையாடக் கூடியவர்கள். அதன் அர்த்தம் இலங்கைத் தமிழர் எல்லோரும் தமிழில் புலமை பெற்றவர் என்று அர்த்தம் ஆகாது – குழுமங்களில்  மொழி வாதம் நிறுத்தப் பட வேண்டும்.

வல்வை குழுமம் ஒன்றில், முன்பு அடிக்கடி சீமான் பற்றிய செய்திகள். சீமானின் மேல் எனக்கும் மதிப்பும் மரியாதை உண்டு. ஆனால் வல்வையின் வளர்ச்சிக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

‘வல்வெட்டித்துறை சமூகம்’ – என்னும் ஒரு குழுமத்தை தொடங்கினார்கள், சிறுமி துஷ்பிரயோகம் இடம்பெற்ற வேளையில்.

‘பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று ஒரு பதிவை இட்டேன். இரண்டு பதில்கள். ஒருவர் ‘சிறுமிக்கு உதவத்தான் வேண்டும், ஆனால் அதற்கு காலம் கனிய வேண்டும்’ என்றிருந்தார். இன்னொருவர் ‘ஊருக்கு ஒன்றும் செய்யாதவர்கள் இப்படியான கருத்துக்களைக் கூறி ஊரைக் குழப்ப வருகிறார்கள்’ என்று பதிவிட்டிருந்தார். 

‘நிச்சயமாக இது எனக்குரிய இடம் அல்ல’ என்று உடனடியாக விலகி விட்டேன்.

பிரதி கூலங்கள் மட்டும்தான் Whatsapp குழுமங்கள் என்று கூற முற்படவில்லை. குறிப்பிடக் கூடிய அசாதாரான அனுகூலங்கள் உண்டு. இந்தப் பக்கத்தின் நோக்கம் அனுகூலங்கள் பற்றியது அல்ல. ஆனாலும் ஒன்றைக் கூற வேண்டும்.

ஆரம்ப காலங்களில் முன் வீட்டுக் காரனுடனும் பக்கத்து வீட்டுக் காரனுடம் நட்பாக பழக்காதவர்கள் இன்று Whatsapp குழுமங்களின் மூலம் நட்பு கொண்டாடுகின்றார்கள், அதுவும் வெவ்வேறு நாடுகளில் இருந்த வண்ணம்.  உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த பலருக்கு இது வரப்பிரசாதம்.

அதே நேரம் அன்று நட்புக் கொண்டாடியவர்கள் இன்று எங்கேயோ இருந்து கொண்டு, குழுமங்களில் சண்டை பிடித்து ‘டு’ போடுகிறார்கள். அன்று ஊரில் இருந்த தெருச் சண்டைகள் போன்று இன்று Whatsapp குழுமங்களில் ஆங்காங்கே சண்டைகள்.

அட நண்பர்கள் வட்டம் பரவாயில்லை என்றால் அங்கும் அவ்வப்போது சண்டை. 15 வயதில் எப்படி நண்பர்கள் சண்டை போட்டோமோ, இப்போ 51 வயதிலும் அதே சண்டை.  

நண்பர்கள் வட்டத்தில் இவ்வாறு ஒரு முறை சண்டை. இதற்கு நண்பன் ஒருவன் ‘நாங்கள் Semi retired, ஆகவே இனிமேலும் இவ்வாறு சண்டை பிடிப்பது அழகல்ல, இருக்கும் நாட்களையாவது நண்பர்களுன் நல்ல பொழுதாக கழிக்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தான்.

‘அட நல்லாத்தானே இருக்கிறது இந்தக் கருத்து’ என்று நினைத்து, ‘எங்களுடன் படித்த வகுப்புத் தோழிகளையும் இணையுங்கள், நல்ல படியாக பொழுதைக் கழிப்போம்’ என்றால் அதற்கும் ‘மாட்டவே மாட்டோம்’ என்கிறார்கள்.

பலர் போல்  ஊருக்கு  உருப்படியான சிலதை செய்ய வேண்டும் என்ற அவாவில், ஏதாவது ஊர் மற்றும் பிரதேச வளர்ச்சி சம்பந்தப்பட்ட  விடயங்கள் அலசப் படுகின்றதா என்று குழுமங்களில் தேடிய எனக்கு தலையில் பதிந்த ஒன்று – இத்தளங்களில் இடம்பெற்றுவரும் அர்த்தமற்ற வாக்கு வாதங்கள் தான்.

போர் முடிந்தவுடன், பெரும்பான்மை அரசியல் வாதி ஒருவர் கூறியிருந்தார் ‘தமிழர்கள் நீங்கள் இனி இணையத்தில் சண்டை பிடியுங்கள்’ என்று. அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம். அதைத்தான் தான் செய்து தொடர்ந்தும் கொண்டிருப்போம்.  

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan  


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Sivanantha (Sri Lanka590238) Posted Date: May 24, 2020 at 00:27 
Well said the truths and sad facts about the whats app groups.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
நெல்லியடியில் கஜேந்திரகுமார் கைதாகி விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
2 போட்டிகளில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேஸ்வரி விசாகரட்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2024 (செவ்வாய்க்கிழமை)
தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2024 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
மணப்பெண் அலங்காரத்தில் 3 ம் இடத்தை பெற்ற யாழ் பெண்மணி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)
பொருளாதார விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அநுர
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
கலைப்பரிதி விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2024 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறையில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பங்குபற்றிய அரசியல் விவாதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நடமாடும் விற்பனை சாவடி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2024 (வியாழக்கிழமை)
நோபல் வென்றார் ஹான் காங்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2024 (செவ்வாய்க்கிழமை)
தமிழ் மொழி மூலம் கற்றறிய கற்றல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் முதன் முறையாக வெள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai