Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (58) - சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்

பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2021 (ஞாயிற்றுக்கிழமை)

ஆதவன் பக்கம் (58) - சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்

இலங்கை அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து, யாழ் பத்திரிக்கைகள், தமிழ் இணையதளங்கள் என செய்தியாக இடம்பெற்றுவிட்டது பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு இடப்பட்ட பூட்டு.

இதையொட்டி முகநூல்களில் பலரும் இரத்தக் கண்ணீர் வடித்துவிட்டார்கள்.

அவ்வாறு வடியும் கண்ணீர்கள் இரண்டு வகை;

முதலாவது - சாராயக் கடைகள் போன்றவற்றுக்கு அனுமதி, அங்கு சனங்கள்  கூடுகிறார்கள். இங்கு மட்டும் கூடுவது பிழையா?

இரண்டாவது - ஒரு நல்ல காரியத்துக்கு (அதாவது உண்ண என்று கூட்டமாக வருபவர்களுக்கு) இவ்வாறு பூட்டு போட்டது பிழை என்று?

நீண்ட காலமாக, இலவசமாக அன்னதானம் (உணவு) வழங்கும் இடமாக சந்நிதியில் உள்ள மடங்கள் இருந்துவருகின்றன.

எனது தந்தையார் செல்வச்சந்நிதி பற்றி ஒரு புத்தகம் எழுதிய போது, கோயிலை சுற்றியிருந்த மடங்கள் பற்றி ஒரு ஆய்வு செய்திருந்தார். அவ்வாய்வில், 80 காலப் பகுதிக்கு முன்னர், செல்வச்சந்நிதி ஆலயத்தைச் சுற்றி, சிறிதும் பெரிதுமாக குறைந்தது 63 மடங்கள், இருந்ததாக அறியமுடிந்தது. அவற்றில் பல யுத்தகாலத்தின் போது அழிவடைந்து விட்டன.

இவற்றில் பல மடங்கள் இப்பொழுது உள்ள போதும், பெரும்பாலானவை வருடாந்த மகோற்சவத்தை ஒட்டித்தான் இயங்குகின்றன.

பாராட்டக்கூடிய வகையில் 365 நாட்களும் இயங்கும் ஒரு ஆச்சிரமமாக 'சந்நிதியான் ஆச்சிரமம்' விளங்கி வருகின்றது. இதை நம்பி சுமார் 50 க்கு மேற்பட்ட - வயதான ஏழ்மையானோர் உள்ளனர்.

உணவு அளிப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது மருத்துவ வசதிகள், உடைகள் வழங்கல் போன்றவற்றுடன், பிரதேசம் தாண்டி அங்கொன்று இங்கொன்று என தேவையுடையோருக்கு, தேவை அறிந்து சேவை செய்யும் திரு. மோகன் அவர்களின் சேவை பலரும் அறிந்த ஒன்றுதான்.

சீல் வைக்கக் காரணம் 

"அனுமதியளிக்கப்பட்டதற்கும் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு அன்னதானம் வழங்கியதாக" தெரிவிக்கப்பட்டே ஆச்சிரமம் சீல் வைக்கப்பட்டது.

பருத்தித்துறை  சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகரினால் இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை  பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டது.  

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று தொடங்குவதாலும், வெள்ளிக்கிழமை என்பது இவ் ஆலயத்தை பொறுத்தவரை ஒரு சிறப்பான நாளாக அமைவதாலும், அன்றைய தினம் அதிகமான அடியவர்கள் சந்நிதியான் ஆச்சிரமத்துக்குள் சென்றது தான் பிரச்சனைக்குக் காரணம்.

கொரொனாவை உலகம் பூராவும் பரவும் ஒரு "கொள்ளை நோய்" (Pandemic) என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன.  "Pandemic" என்பது "Epidemic", "Endemic", "Out break" போன்ற சகலதினதும் முன்னோடி.. அதாவது ஒரு பரவும் நோயின் உச்ச கட்டம் தான் "Pandemic".

"Pandemic" என்று சொற்பதத்துக்கு இணங்க - குறித்த நோய் பல வருடங்கள் நீடிக்கலாம். ஏராளமானோர் இறக்க நேரிடலாம்.

கீழே மேலதிக விளக்கத்துக்கு

EPIDEMIC - is a disease that affects a large number of people within a community, population, or region

ENDEMIC - is something that belongs to a particular people or country.

OUTBREAK is a greater-than-anticipated increase in the number of endemic cases. It can also be a single case in a new area. If it’s not quickly controlled, an outbreak can become an epidemic

PANDEMIC - is an epidemic that’s spread over multiple countries or continents.

ஆகவே மேற்கூறியவற்றை  அறிவு பூர்வமாக ஆராய்ந்தால்  – ஆச்சிரமத்துக்கு பூட்டு போடப்பட்டமை ‘சரியான ஒரு முடிவு தான்’ என்ற முடிவுக்கு வரலாம்..

பூட்டு போடுவதில் சம்பந்தப்பட்டவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

முகநூல் வாதம் என்னவென்றால் “நாட்டில் பல இடங்களில் சனம் கூடுது, இங்கு கூடினால் மட்டும் பிழையா” என்பதுதான்.

“நஞ்சு சாப்பிடக் கூடாது” என்று அரசு ஒரு சட்டம் போடுகின்றது என வைத்துக் கொள்வோம்.

ஆங்காங்கே சிலர் சட்டத்தை மீறி நஞ்சை சாப்பிடுகின்றார்கள்.  

எங்கள் பகுதியில் அவ்வாறு நஞ்சு சாப்பிட்ட ஒருவரை கைது செய்கிறார்கள். இங்கு எங்கள் வாதம் என்னவென்றால் “நஞ்சு சாப்பிட்ட மற்றவர்களை கைது செய்யவில்லை.  எங்கட ஆளை மட்டும் கைது செய்து விட்டார்கள். ஆகவே  இது ஒரு பிழையான விடயம்" என்பது தான்.

கப்பலில் அமெரிக்க செல்லும் போது, அமெரிக்காவில் பொதுவாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்று அந்த நாட்டின் CFR (Code of Federal Regulations) இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

CFR பொதுவாக இருக்க, அமெரிக்காவின் ஒரு மாகாணமான கலிபோர்னியாவில் இதை விட கூடுதலான - கடுமையான விதிமுறைகள் உண்டு. இது போதாதென்று கலிபோர்னியா மாகாணத்திலேயே உள்ள சாண்பிரான்சிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இரண்டு துறைமுகங்களுக்கு இடையே மாறுபாடான விதிமுறைகள் உண்டு.

மேற்கூறியவாறு பார்த்தால் பி‌எச்‌ஐயும், பிரதேச செயலகங்களும் அவ்வாறு  இருக்கலாம் தானே? எமது பிரதேச செயலகங்களும் பி‌எச்‌ஐ மாரும் சற்று மேம்பட தொழிற்படுகின்றார்கள் ஏன் கருத முன்வரவில்லை?.

ஆச்சிரமத்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

வயதானவர்கள் – பல்வேறு இதர நோய்களுக்கு ஏற்கனவே ஆளானவர்கள் – கொரொனாவால் பீடிக்கப்பட்டால் – மிகப்பெரும்பாலும் இறப்பு உறுதி.

இதை கண் கூடாகவும் பார்க்கலாம். உலகளாவிய அறிக்கைகள் மூலமும் பார்க்கலாம்.

யாருக்குத் தெரியும். சீல் வைத்ததன் மூலம் சில உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கலாம்.

ஒருவேளை துர் அதிஷ்டவசமாக அன்னதானம் உண்ண வந்தவர்களுக்கு கொரொனா பீடித்து இருந்தால் "Status" போட்ட எவராவது – உதவ முன்வருவார்களா?

இன்று கொரொனாவால் ஒருவர் இறந்தால் – இறப்பின் பின்னர் இறந்தவரின்  முகத்தை எவரும் பார்க்க முடியாது. முழு உடலும் மூடிக் கட்டப்பட்டுவிடும்.

தகனக் கிரியைகள் - ஊரணியில் உள்ளது போல் இரண்டு சுடலைகள் இல்லை – எல்லோருக்கும் ஒரு சுடலைதான் – கோம்பயன் மின் மயானம். தகனக் கிரியைகளில் இருவருக்கு மட்டும் தான் அனுமதி. அதுவும் எட்ட நின்று பார்க்க வேண்டியது தான். காடாத்தல், பால் தெளிப்பு என்றெல்லாம் இல்லை. ஒருவேளை அவ்வாறு இருந்தாலும் ஒருவரும் எட்டியும் பார்க்கவும் போவதில்லை. 

18 மாதங்கள் முன்பு உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரொனாவு அபாயம் பற்றி சிவப்புக்கொடி காட்டியது. வளர்ந்த நாடுகள், வளராது நாடுகள் என்று வகையன்றி, WHO இன்   அறிவுறுத்தல்களை பலரும் பின்பற்றவில்லை. விளைவை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த 6 நாட்களில் வல்வையில் இடம்பெற்ற மூன்று மரணங்களுக்கும் மூல காரணம் கொரொனாதான். இதில் ஒருவருக்கு இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு தான் கொரொனா என்று தெரியும். ஒருவருக்கு இறந்த பின்பு தான் உறுதிசெய்யப்பட்டது.

இது எதைக் காட்டுகிறது என்றால் எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியுள்ள சிலருக்கோ அல்லது பலருக்கோ கொரொனா இருக்கக் கூடும் என்பதைத் தான்.  

கொரொனாவின் வீரியத்தை அறிய விரும்பினால் நாளாந்த மரண எண்ணிக்கையை (Death Rate) கூர்ந்து கவனியுங்கள். ஏனெனில் இது மாறுபடாத ஒன்று.

நாளாந்தம் கொரொனாவால் பீடிக்கப்படுவார்கள் எண்ணிக்கை” யை துல்லியமாக அறியவேண்டும் என்றால் எல்லோருக்கும் எல்லா நாட்களும், தொடர்ந்து PCR சோதனை செய்யப்படவேண்டும். இது, கைலாசா தவிர்ந்த, எந்தவொரு நாட்டாலும் நடைமுறைப்படுத்தமுடியாத ஒரு விடயம். 

லொக்டவுன் – கேட்டு , பார்த்து, அனுபவித்து முழு உலகமே களைத்துவருகின்றது.

தனி நபராக என்னை எடுத்துக்கொண்டால், கொரொனா தொடங்கியதிலிருந்து ஏராளமான நஷ்டங்கள், கஷ்டங்கள்.. கப்பலுக்கு ஏற முன்னர் தனிமைப்படுத்தல் இறங்கிய பின்னர் தனிமைப்படுத்தல், ஏராளமான பி‌சி‌ஆர் சோதனைகள். கொரொனா காரணமாக உரிய நேரத்தில் கப்பல் ஏற முடியாமை. கப்பலில் ஏராளமான இடர்பாடுகள் என்ற நீண்ட பட்டியல்.

என்னைப் போல், கொரொனாவால் அனைவருக்கும்ம் நேரடியாகவோ அல்லது  மறைமுகமாகவோ சில பல பிரச்சனைகள்.

பல நாடுகளின் பொருளாதாரமானது, உடம்பில் அடி விழாத இடமே இல்லை என்றளவில் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே "இனிமேல் லொக்டவுன் இல்லை" என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு தலைவர்கள் தள்ளப்பட்டுக்கொண்டு வருகின்றார்கள். பாதாளத்துக்குள் விழும் பொருளாதாரத்தை எட்டி விழாமல் பிடிக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழியில்லை.

அதே நேரம் கொரொனாவும் பூப்படைந்து மேலும் முதிர்ச்சியுற்று டெல்ரா ஆனது ஒரு காமாகவோ அல்லது ஒரு பீற்றாவாகவோ மாறினால், நிலமை மென்மேலும் சிக்கல் அடையும்..

முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் இவ்வாறு இருந்தது.

இனிமேல் முடக்கம் இல்லை அடக்கம் தான், விளங்கி நடந்து கொள்ளுங்கள்” என்று. சோ, கருணாநிதி போல் நச் என்று யாரோ ஒருவர் எழுதியுள்ளார் .

பலரும் கணித்தது போல், கடந்த வாரம்  நானும் கொரொனா தொற்று குறையும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் நிலமை அவ்வாறு இடம்பெறவில்லை. இதுதான் வைரசின் திரிபு. கண்ணுக்குத் தெரியாத அதன் பரம்பல்.

எமக்கும், எம்மைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கும் கொரொனா தொற்று  இருக்காது என்ற ரீதியில் தான் எம்மில் பலரும் இன்றும் நம்புகின்றோம். கூடுகின்றோம்.

கொரொனா ஆரம்பித்த போது, அதிகளவான கொரொனா தொற்று என  பேசப்பட்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று.

அப்பொழுது அங்கு ஒரு பைலட் உடன் கதைத்த போது, "எம்மிடம் நல்ல சுகாதார ஆளணி மற்றும் பொருளனி வசதிகள் உண்டு. கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்" என்றார்கள். உண்மை என்று காட்டிவிட்டார்கள். தடுக்கிவிழும் இடம் எல்லாம் தரமான Sanitizer களை வைத்தார்கள்.

ஆரம்பத்தில் கொரொனா விழிப்புணர்வு பற்றி கலந்துரையாடும்பொழுது, இங்கு எமது தொடர் மாடிகளிலும் கிருமி நீக்கி வைக்குமாறு பரிந்துரைத்தார்கள்.

எனக்குத் தெரிந்த தொடர் மாடி ஒன்றில் "Sanitizer வைத்தால் யாரும் எடுத்து விடுவார்கள்" என்று கருதி ஒரு சவர்க்காரத் துண்டை, பழைய டப்பா ஒன்றில் வைத்தார்கள். கப்பல் ஏற முன்னர் சவர்க்காரத் துண்டைப் பார்த்தேன். கப்பலால் இறங்கிய பின்னரரும் அதே சவர்க்காரக்கட்டியைப் பார்த்தேன்.

யாழ் வைத்தியசாலைகளில் எத்தனை Ventilators (ICU மெஷின் பேச்சு வழக்கில் கூறப்படுவது) உண்டு என்று கணக்கு எடுங்கள். ஒரு மூச்சு விடுவதற்க்குள் விடையை எண்ணி விடலாம். Oxygen plant? இந்தியாவே அவசரகால அடிப்படையில் இதை சில மாதங்கள் முன்பு பிறப்பித்தது.

ஆகவே இலங்கை போன்ற நாடுகளில் பெரிதும் செய்யக் கூடியவை - சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் ஊசி தான்.

சிலர் ஊசி போடவும் அடம்பிடிக்கிறார்கள்.

பிறநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் வைத்தியர் ஒருவரை கொரொனா பற்றி செவ்வி காண்கிறார்கள்.

"எந்த ஊசி இருப்பதிலே திறம்" என்று கேட்கின்றபோது – வைத்தியரின் பதில் – "உங்களுக்கு முன்னால் எந்த ஊசி உள்ளதோ அதுதான் சிறந்த ஊசி" என்கிறார். ஊசி ஏற்றியது போல் இருந்தது அந்த வைத்தியரின் பதில்.

கொரொனா பற்றியோ, Pandemic பற்றி என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் ஊசிகளின் தரம் பற்றி பாடம் எடுக்கின்றார்கள். "எந்த ஊசி போட்டுள்ளாய்" என்கிறார்கள். "சினோபார்ம்"  என்றவுடன் "அடடா இதை ஏன் போட்டாய் அதைப் போட்டு இருக்கலாம் தானே" என்கிறார்கள். 

Stay Home - வீட்டிலேயே இருப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று.

வீடும் நாடும் இயங்க சில, பல முன்னணி வேலைகாரர்கள் (Front line Workers) உழைத்தே ஆக வேண்டும். 

ஆனாலும் வயதாவனர்கள் – இவர்கள் பெரும்பாலும் உழைத்து ஓய்வு பெற்றவர்கள், இதர குடும்ப உறுப்பினர்களில் தங்கி வாழ்பவர்கள், குறைந்த பட்சம் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். இதனால் மரணங்களையும் இதர அசெளகாரியங்களையும் தவிர்க்கமுடியும்.

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada) Posted Date: August 09, 2021 at 02:14 
காலத்துக்கேற்ற அருமையான, அவசியமான பதிவு.
நன்றி ஆதவன்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2025>>>
SunMonTueWedThuFriSat
      1
2
3
4
5
67
8
9101112131415
16
17
18
19
202122
23
24
2526272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai