Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)

பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)

‘ஐயா, கப்பல் வாழ்க்கையில் உங்களுக்கு மிகப்பிடித்த விடயம் எதுவாக இருந்தது?’ என்றேன், ‘சிறந்த சாப்பாடுதான்’ என்றார். கடந்தமுறை நான் விடுமுறையில் நின்றபோது திரு.நவரத்தினம் அவர்களிடம் சென்று பல கேள்விகளைக் கேட்டு அவர் அளித்த பதில்களை ஒலிப்பதிவும் செய்திருந்தேன்.

நவரத்தினம் அவர்கள் தனது 98 ஆவது வயதில் கடந்த 8 ஆம் திகதி இயற்கை எய்தினார்.

வல்வையின் மூத்த கடலோடி நவரத்தினம் அவர்கள் தான். ஏன் இலங்கைத் தமிழர்களில் மத்தியில் என்று கூடக்கூறலாம். 

அமெரிக்கா சென்ற அன்னபூரணி பாய்மரக் கப்பலில் தான் பணிபுரியவில்லை, ஆனாலும் அதனையொத்த இதர பல பாய்மரக் கப்பல்களில் தனது இளம்பராயம் முதல் பணிபுரிந்ததாக மிகவும் அடக்கமாக மேலும் கூறினார்.

மூன்று ஆண்டுகள் முன்பு எமது குடும்பத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்ட அன்னபூரணி மாதிரி வடிவக் கப்பலுக்குப் பாய் அமைப்பதற்கு, அமரர் சிவனடியார் நவரத்தினம் (கட்டி அண்ணா) அவர்களிற்கு ஆலோசனைகள் வழங்கியவர் நவரத்தினம் அவர்களே.

நான் பணிபுரியும் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திலும், ஆரம்ப காலங்களில் சுமார் நாற்பது வருடங்கள் முன்பு இவர் பணிபுரிந்துள்ளார்.  நவரத்தினம் அவர்களின் பெறுமதி ஒரு சிலருக்கு மட்டும் தான் அதிகம் தெரியும். அவரின் ஈழத்தமிழர் கடல்சார்ந்த அனுபவம் ஆனது இனிமேல் எந்தவொரு அகராதியிலோ அல்லது விக்கிப்பீடியா போன்றவற்றிலிருந்தோ பெறக்கூடிய தொன்றல்ல.

நவரத்தினம் அவர்கள் பெற்றிருந்த அனுபவத்திற்கு நிகர் அவரேதான்.

கடந்த இரண்டு வருடங்கள் முன்பு யாழில் இருந்து வெளிவரும் ஒளிஅரசி சஞ்சிகைக்கு என்னை நேர்காணல் காண வந்திருந்தார்கள். வந்தவர்களை திரு.நவரத்தினம் அவர்களிடம் அழைத்துச சென்றேன். அவரைப்பற்றிய தகவல்களும் குறித்த சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது.  

முடிந்தவரை அவரிடம் இருந்து பலவிடயங்களை அறியவிரும்பி அணுகினேன். அவரின் முதுமை எனது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்றாலும், மிகவும் அரிய பல தகவல்களைப் பெற்றுள்ளேன். குறித்த தகவல்கள் அனைத்தும் இப்பத்திக்கு ஏற்புடையதல்ல என்றாலும் காலப்போக்கில் அவற்றை உரிய இடத்தில் ஆவணப்படுத்துவேன்.

ஆனாலும் நவரத்தினம் அவர்கள் கூறிய ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அது கப்பல் வாழைப்பழம் பற்றிய கதை.

கப்பல் வாழைப்பழத்துக்கு பெயர் வரக் காரணம் ‘அக்காலங்களில் விலைகூடிய குறித்த இந்த வாழைப்பழத்தை கப்பல்காரர்கள் அதிகம் வாங்கியதாலேயே கப்பல் வாழைப்பழம் எனப் பெயர் பெற்றது’ என அடித்துக்கூறினார். ‘அப்படி என்றால் அதற்கு முன்னர் கப்பல் வாழைப்பழம் எவ்வாறு அழைக்கப்பட்டது’ எனக்கேட்டேன். ‘ஏதோ பெயர் இருந்தது.......’ எனக்கூற முயற்சித்தார். முதுமை இடம்கொடுக்கவில்லை.

பொதுவாக கப்பற்துறை சார்ந்த செய்திகள் சர்வதேசரீதியில் விமானத்துறை சார்ந்த செய்திகள் போல் ஒரு பொழுதும் பேசப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் மயிலிட்டியில் தரைதட்டி கைவிடப்பட்ட கப்பல். இதேபகுதியில் ஒரு விமானம் இவ்வாறு விபத்தை சந்தித்து இருந்திருந்தால் அது முழு இலங்கை மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் செய்தியாக பேசப்பட்டிருக்கும்.

இன்று பல சமூகவலைத்தளங்களைப் பொறுத்தவரை, பொதுவாக தாமாக சுயமாக செய்தி தேடி தயாரித்துப் பிரசுரிப்பது என்பது குறைவு. இதர பிற மூல சமூகவலைத்தளங்களில் தங்கியுள்ள இவர்கள், அத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளை கொப்பி செய்து அதற்குள் உப்பு,  மிளகு போன்றவற்றை சேர்ப்பது போல் தமது பங்கிற்கு சிலவற்றை சேர்த்து, தமது செய்திகள் போல் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள். மூல சமூக வலைத்தளங்கள் செய்தியாக்க தவறிய பல விடயங்களை இவர்கள் செய்தியாக்குவதும் இல்லை.  இதற்கு வல்வை சார் சமூக வலைத்தளங்களும் விதி விலக்கல்ல.

வல்வையின் மூத்த கடலோடி எனப்பலராலும் அறியப்பட்ட ஒருவர், பலமுறை கெளரவிக்கப்பட்ட ஒருவர், அவரின் மறைவின் போது செய்தியாக்கப்படாதது இதற்கு சிறந்த உதாரணம்.

நவரத்தினம் அவர்களின் ஈமைக்கிரியைகைகளில் வெறும் முப்பதுபேர்கள் அளவில்தான் கலந்துகொண்டுள்ளார்கள். வருத்தமளிக்கும் விடயம் இது.

வாழும்போது பேசப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் ஆனால்  இறக்கும்போது பிரபல்யமாக இல்லாமல் சமூகத்தில் கவனிக்கப்படாமல் மறைந்தவர்கள் பலர். இவர்களில் நவரத்தினம் அவர்களும் ஒருவர்.

ஆயிரம் ரூபாயிற்கு ஒரு வள்ள அரிசி 

அடிச்சுதடா முத்து பெட்டி பிளேட்டி

ஆகாயம் வானம் போல் இருக்கும் வள்ளத்தில் 

அணை அனையாய் வந்திறக்கும் வல்வையில் அரிசி 

ஏறாத களத்தெல்லாம் ஏறிச்சுது காளி 

போடாதவினையெல்லாம் போட்டுது விரல் 

அடிச்சுதடா முத்து பெட்டி பிளேட்டி 

ஆயிரம் ரூபாய் போல இருக்கும் தள்ளத்தில் 

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan  


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: April 25, 2018 at 08:12 
சிறந்த பதிவு ;


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
சிவாஜிலிங்கத்தின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நிதி உதவி கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - தியாகராஜா சண்முகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2024 (செவ்வாய்க்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை புகையிரத சேவை நாளை மீண்டும் ஆரம்பம் (நேர விபரம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
நெல்லியடியில் கஜேந்திரகுமார் கைதாகி விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
2 போட்டிகளில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2024 (வியாழக்கிழமை)
முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேஸ்வரி விசாகரட்னம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2024 (செவ்வாய்க்கிழமை)
தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2024 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2030>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai