Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -

பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
நரையாகிப் போன மூன்று நான்கு சாரங்கள், திருப்பித் திருப்பிக் கட்டும் சாதாரண வேட்டிகள், சட்டைகள், பாண்ட்டுகள். எதுவித வாகனங்களோ, ஏன் இரு அல்லது முச்சக்கர வண்டிகளோ கூட இல்லை. அண்மைக் காலம் வரை நோக்கியா போன் தான். தேவை கருதி அண்மையில் தான் ஒரு சாம்சங் போன். வீடு, கீடு, பிரிட்ஜ், வோஷிங் மெசின் என்று எந்த அசையும் அல்லது அசையாச் சொத்துக்களோ இல்லை.
 
ஜெனீவா செல்லும் போது பொன்சர்கள் சொதப்பும் போது, அங்கு இங்கு கைமாறுவதால் கடமைப்பாடு. வங்கியிலும் எதுவித பணமும் இல்லை.
 
இதுவரைக்கும் இவர் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர். இரண்டு தடவைகள் நகர சபைத் தலைவர். ஜனாதிபதி வேட்பாளர், தற்பொழுது மாகாண சபை உறுப்பினர் – சிவாஜிலிங்கம்.
 
எனக்குத் தெரிந்த நாளில் “சிவாஜிலிங்கம் மாமா” என்றழைப்பேன், இப்பொழுது “சிவாஜி அண்ணா” என்று அழைக்கின்றேன். கட்டுரை நயத்திற்காக இங்கு “சிவாஜிலிங்கம்” என்றே குறிப்பிடுகின்றேன். குறை நினைக்க மாட்டார் என்று பெரிதும் நம்புகின்றேன்.
 
இலங்கையில் யாவராலும் அறியப்பட்ட இரு தமிழ்த் தலைவர்கள்
 
நான் பணி புரியும் கப்பலில் எப்பொழுதும் இலங்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த குறைந்தது 4 அல்லது 5 நபர்கள் என்னுடன் பணி புரிவார்கள். கூடுதலாக பெரும்பான்மை இனத்தவர்கள். சராசரிக்கும் மேலாக கல்வி அறிவு கொண்டவர்கள்.
 
இவர்களிடம் பல தமிழ் தலைவர்களின் பெயர்களைக் கூறி (மாவை. சுமந்திரன், சம்பந்தன், சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன்) இவர்களை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டால் – 100 வீதம் அனைவராலும் அறியப்பட்டவர்கள் இருவர் தான்.
 
ஒருவர் சிவாஜிலிங்கம். மற்றவர் விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் அதுவும் கடந்த 3 ஆண்டுகளாகத்தான்.
 
இங்கு நான் சிவாஜிலிங்கத்தின் “இலங்கை அரசியல்” பற்றி பேசவரவில்லை. நல்லதல்ல.
 
ஏனெனில் 2012 ஆம் ஆண்டு ரேவடி விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டியை, அப்பொழுது, இராணுவ முகாம் இருந்த அப்பகுதியிலேயே நடாத்த முற்சித்தோம்.
 
அனுமதியைப் பெறுவதற்காகவும் பின்னர் விருந்தினராக அழைப்பதற்கும் இராணுவ முகாம் கமாண்டருடன் கதைப்பதற்கு நான் சென்றிருந்தேன் (செல்வேந்திரா அவர்களின் வீடு, என்னுடன் மேலும் 3 கழக உறுப்பினர்கள் வந்தனர்). முதலில் ஒருவாறு அனுமதி ஓகே. காம்பிற்குள் போட்டியை நடாத்துவதால், மரியாதை நிமித்தம் கமாண்டரையும்  அழைக்க கேட்கச் சென்ற போது, “சிவாஜிலிங்கத்தை அழைக்கின்றீர்கள் போல் தெரிகின்றது” என்றார் கமாண்டர்.
2012 ஆம் ஆண்டு ரேவடி
விளையாட்டுப்போட்டியில்
சிறப்பு விருந்தினராக 
அவர் “எங்கள் கழக மூத்த உறுப்பினர், ஊரின் பிரமுகர், அதனால் அழைத்துள்ளோம்’ என்றேன். “பரவாயில்லை, ஆனால் இந்த நிகழ்வில் சிவாஜிலிங்கம் விளையாட்டைப் பற்றி மாத்திரம் பேச வேண்டும், இது உமது பொறுப்பு” என்றார்.
 
நான் இது பற்றி சிவாஜிலிங்கத்திடம் எதுவும் கதைக்கவில்லை. நம்பிக்கை.
 
கமாண்டரும் வந்தார் சிவாஜிலிங்கமும் வந்தார் போட்டிக்கு. கமாண்டர் மேடையில் சிவாஜிலிங்கத்துடன் தான் பேசிக் கொண்டிருந்தார் என்பது வேறு விடயம்.
 
சிவாஜிலிங்கம் விருந்தினர் உரையில் பேசும் பொழுது - ரேவடியையும் விளையாட்டையும் பற்றி மட்டுமே பேசினார்.
 
இதுபோல் மிக அண்மையில் இன்னொமொரு சம்பவம். அதைப்பற்றி இங்கு எழுதவில்லை.
 
சிவாஜிலிங்கம் மீது இராணுவமும் அரசும் கொண்டுள்ள நிலைப்பாடு வித்தியாசமானது என்று மட்டும் இந்த இரண்டு சம்பவங்களில் இருந்து தெரிகின்றது.
 
ஆகவே அவரின் இலங்கை அரசியல் பக்கத்தை மூடி,  அவர் ஊருக்கு என்ன செய்துள்ளார், என்ன என்ன செய்கின்றார், அவருக்கு எதிரான மாற்று அரசியல், சிவாஜிலிங்கத்தின் தேவை போன்றன மட்டும் சற்றுக் கூறுவதே எனது இப்பக்கத்தின் நோக்கம்.
 
ஊருக்குள் மீள் பிரவேசம்
 
சிவாஜிலிங்கத்தின் வல்வை மீதான சேவை என்பது 1999 இல் ஆரம்பமானது. மிகவும் இறுக்கமான காலகட்டம் இது. எந்தவொரு சிறிய வசதி கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி கொழும்புக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ ஊர் மக்கள் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, எனக்குத் தெரிய ஊருக்கு வெளியிலிருந்து வந்த ஒரே ஒரு ஆள் சிவாஜிலிங்கம் மட்டும்தான்.
 
1999 – 2009 இடப்பட்ட காலத்திலான நகரசபைத் தேர்தலில் போட்டியிடப் போனால், “மண்டை உருளும்” என்ற நிலையில் எவரும் போட்டியிட முன்வரவில்லை. இன்று எண்மர் நகரபிதாவாக போட்டியிடுகின்றார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. வாழ்வியலின் யதார்த்தம் தான் இது – ஆனால் விதிவிலக்காக நின்றவர் சிவாஜிலிங்கம்.
 
புலிகளின் ப்ளூ ப்ளானுக்கு உயிர் கொடுத்தவர்
 
இதற்கு முன்னரான வல்வை நகரசபைத் தேர்தலில் இதர கட்சிகள் போட்டியிட்டு, ஒரு வோட்டு இரு வோட்டு எனப்பெற்று, பெயருக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்த காலம்.
 
1999 இலும் அதற்குப் பின்னரான நகரசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு, 90 இல் பிரேமதாச அரசு – புலிகள் ஒப்பந்த காலத்தில், புலிகள் வல்வை நகரசபைக்கு எனத் தீட்டிய வல்வை நகரசபை அபிவிருத்திகளுக்கு வடிவம் கொடுத்தார்.
 
இவற்றுள் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மாடிக் கட்டட மீள் நிர்மாணம், புதிய வல்வை சன சமூக சேவா நிலையம் மற்றும் பஸ் தரிப்பிடம், புதிய மீன் சந்தைத் தொகுதிக் கட்டடம், புதிய நகரசபைக் கட்டட ஆரம்பப் பணிகள் என்பவை குறிப்பிடக் கூடியவை.
 
இவற்றில் இன்னும் நிலுவையில் உள்ள குறிப்பிடக் கூடிய விடயம் நெற்கொழு விளையாட்டு மைதான காணிப் பிரச்சனை. இங்கு “நகுலேஸ் மாமா” என்னும் பெயரில் ஒரு பொது விளையாட்டரங்கு அமைப்பது அப்பொழுது புலிகள் போடப்பட்ட ப்ளூ பிளானில் ஒன்று.
 
மைதான காணிப் பிரச்சனை மிகவும் இறுக்கத்தில் உள்ளது. ஆனாலும் காணியை மீட்க இன்றும் தொடர்ந்து கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
 
(புலிகளின் ப்ளு பிளானில் விடுபட்டது கலாச்சார மண்டபம். இதற்கு உத்தேசிக்கப்பட்ட இடம் கையகப்படுத்த முடியாது போனதால், இத்திட்டம் துரதிஸ்டவசமாக கைவிடப்படவேண்டிய நிலை ஏற்பட்டது).
 
ஏனைய சில
 
•       அண்மையில் நண்பன் ஒருவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு “வல்வை நகரசபைக்கு வெளியேயுள்ள கோயில் நிர்வாகம் ஒன்று, ஊரணி தீர்த்தக் கடற்கரைப் பகுதியை தமது நிலம் என சட்டரீதியாகக் கோரியுள்ளார்கள் (Deed of declaration)’ என்றான்.
 
சிவாஜிலிங்கத்தை கேட்டேன், ‘அவர் தனக்கு விடயம் தெரியும் என்றும் தான் தனது நீதியில் ஒரு லட்சம் ஒதுக்கி, சில வேலைகளைத் தொடங்கி குறித்த நிலத்தை தொடர்ந்தும் வல்வை நகரசபையின் கீழ் உள்ள சொத்தாக வைத்திற்குக்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்’ என்றார். அத்துடன் “இதனுடன் சம்பந்தப்பட்ட பல ஆண்டு ஆவணங்களை தான் ஏற்கனவே சேகரித்துள்ளேன்” என்றும் மேலும் கூறினார்.
 
•       அண்மையில் உலகுடையார் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள 4 அடி பாதை (பெயர் லட்சமி வளைவுப் பாதை, வல்வைக் கல்வி மன்றத்துக்கு பின்னால் உள்ளது) ஒன்றை, அப்பகுதி காணிக் காரார் நிரந்தரமாக மூடிவிட்டார். அயலவர்கள் சிலர் மீண்டும் திறக்கக் கேட்டார்கள், நகரசபையும் தலையிட்டது. இதை அகற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
 
•       ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கடந்த சில வருடங்களாக 50 பிள்ளைகளுடன்தான் இயங்கி வருகின்றது. இதற்குப் பிரதான காரணம் இப்பகுதியில் மக்கள் இருப்பு முன்னர் பெரிதாக இல்லை. இப்பொழுது தான் அங்கொன்று இங்கொன்றாக தளிர்க்கின்றது. இப்பாடசாலையை தக்க வைக்க முன்பள்ளி ஒன்றை இங்கு நிறுவி பெரிதும் முயற்சி செய்து வருகின்றார்.
 
16 பரப்புக் காணி
 
பம்பாயில் நரிமன் போயின்ட், ஜப்பானில் ரோக்கியோ, இங்கு கொழும்பில் கறுவாத் தோட்டம் – இங்கெல்லாம் ஒரு சதுர அடி நிலத்தின் விலை கோடியில். ஏனெனில் நகரப் பகுதியில், அதுவும் பிரசித்தி பெற்ற இடங்களில் நிலத்தின் மதிப்பு அப்படி.
 
எமது பகுதியும் அதற்கு விதி விலக்கல்ல. கடந்த வருடம் வரை பலரின் கண்களை ஈர்த்திருந்தது வல்வை சந்தியை யொட்டி அமைந்துள்ள இலங்கைச் சுங்கத்திற்குச் சொந்தமாகவிருந்த நிலம். அதுவும் ஒன்று, இரண்டு பரப்பு அல்ல. 16 பரப்புக்கள்.
 
இராணுவம் இங்கிருந்து வெளியேறவும் சுங்கத்தினர் வந்து “இந்த நிலம் இலங்கை சுங்கத்திற்குச் சொந்தம்’ என தமது பலகையை நாட்டி விட்டுச்சென்றனர். போடப்பட்ட ஒரு வாடியையும் அகற்றுவித்தனர்.
 
இந்தக் காணியை சுங்கத்திடம் இருந்து மீட்டே தீர வேண்டும் என்பது என் போன்ற பலரின் அவா. இன்று பலர் கூடும் ரேவடிப் பூங்கா மேலும் விரிவு படுத்தப்படவேண்டும் என்பதே இதன் மூல காரணம்.
 
குறித்த சுங்கக் காணியை மீட்க முழு மூச்சாக நின்றவர் என்றால் அது சிவாஜிலிங்கம் தான். இவர்தான் முழுக் காரணம் என்று நான் கூறவில்லை. நகரசபை நிர்வாகம், பருத்தித்துறை பிரதேச செயலகம் என்று பலரின் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.
 
அரச காணியை கைமாற்றுவது என்பது கிட்டத்தட்ட ஒரு முடியாத காரியம். மங்கள சமரவீரவினூடாக காணியை கையகப்படுத்த பெரிதும் உழைத்திருந்தார்.
 
ரேவடியில் சர்வதேச தர நீச்சல் தடாகம் தேவைதானே என்றார்கள் சிலர். சுங்கத்தினர்  ஒரு கட்டடத்தைக் கட்டியிருந்தால்?
 
ஆழமாக அறியப்படாத விடயம் இன்னுமொன்று.
 
அரச நிதியில் (அதாவது தற்பொழுது ரேவடியில் அமையும் நீச்சல் தடாகத்தை) பெரிய நீச்சல் தடாகத்தை தீருவில் பொதுப் பூங்காவில் அமைப்பதன் மூலம் அதன் இருப்பை உறுதி செய்து, ஆனந்தனின் உறவினர்கள் மூலமாக பெறப்படும் நிதியிலிருந்து (இதில் மங்களவும் தனிப்பட்ட ரீதியில் பங்களிப்புச் செய்யவிருந்தார்) ஒரு சிறிய நீச்சல் தடாகத்தை ரேவடியில் அமைத்து, பெரிய நிலப் பகுதியுடன் கூடிய ரேவடி பூங்கா என இரண்டையும் நிரந்தரமார தக்கவைப்பதே இவரின் நோக்கமாகவிருந்தது.
 
(வல்வெட்டித்துறை.org இணையதளத்தில் நீச்சல் தடாகம் பற்றிய முழுச் செய்திகளையும் வாசித்தால் இது பற்றி தெளிவாக விளங்கும்)
 
ஆனாலும் ஒரு சில கனவான்கள் தீருவிலில் நீச்சல் தடாகம் சாத்தியம் அல்ல எனக் கொடுத்த “புட்டிசம்” இரண்டை ஒன்றாக்கிவிட்டது.
 
வட மாகாண சபை உறுப்பினராக
 
இவற்றை விட வட மாகாண சபை உறுப்பினர் நிதியிலிருந்து பல ஒதுக்கீடுகள், பல திட்டங்கள். இவை ஊருக்கு மட்டும் அல்ல, ஊரைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மற்றும் யாழ்பாணம் எனப்பல. விவரங்கள் சுட்டிக்காட்டப்படவேண்டிய அவசியம் அற்றவை, ஒன்றைத் தவிர.
கடந்த மாகாண சபை தேர்தல்
பிரசாரம் தொண்டைமானாற்றில் 
வட மாகாண நிதியின் கீழ் 3 லட்சம் ரூபா ஒதுக்கி, சிதம்பராவில் கூடைப் பந்தாட்ட மைதானம் ஒன்றை கட்ட முனைந்தார். மரங்களை வெட்டியதாக எதிர்ப்புக் கிளப்பப்பட்டது. கூடைப்பந்தாட்ட மைதானத்தை கல்லூரியின் பிற்பக்கம் கட்டியிருக்க வேண்டும் என்று இன்னொரு சாரார்.
 
கொழும்பில் பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரியில் இருந்து பருத்தித்துறை காட்லிக் கல்லூரி வரை கூடைப் பந்தாட்ட மைதானம் ஆனது கல்லூரி முகப்பில் தான் உள்ளது. கூடைப் பந்தாட்டத்தை விட மாணவர்கள் பரேட் செய்யவும் இது தான் வசதியாகவும் இருக்கும்.
 
மரம், மழை, நீர், சுற்றுப்புறச் சூழல் பற்றி மிக அதிக அக்கறை கொண்டவன் நான். ஒரு அபிவிருத்திப் பணிக்காக மரங்களை வெட்டுவது சரி என்பது என் வாதம். அதற்கு மாற்றாக மரங்கள் நாட்டப்பட வேண்டும்.
 
பரவாயில்லை வெட்டியது “தவறு” என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை ஒரு கிரிமினல் நடவடிக்கை போல் சித்தரிப்பது சிவாஜிலிங்கத்தின் மேற்கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு ஒன்றுமல்ல. அத்துடன் சிவாஜிலிங்கம் ஒரு வகையில் ஒரு ‘Soft target’, மறுவகையில் ஒரு ‘பிரபல்யம்’.
 
அண்மையில் கூட வல்வை நகரசபைக்குள் இருந்த பல மரங்களை வெட்டினார்கள். எனது தம்பியார் வைத்து சுமார் 20 அடி வளரந்த மரமும் அவற்றில் ஒன்று. கவலையாகத்தான் இருந்தது. வாகனங்கள், பொருட்கள் கூடுகின்றது, அதனால் இடம்தேவைப்படுகின்றது. இது தான் வெட்டியதன் காரணம். ஏற்கதானே வேண்டும்.
 
கடந்த பல வருடங்களாக கோவில் திருவிழாக்களின் போது, வடமராட்சி கிழக்கின் பூர்வீகச் சொத்தான மூங்கில்களையும், சவுக்குகளையும் வெட்டி ஊரிக்காட்டிலிருந்து ஊரணி வரை நாட்டுகின்றோம்.ஒன்றா, இரண்டா ஆயிரக் கணக்கில். யாராவது வாய் திறந்தார்களா இதுவரை. இல்லை. பயம், அம்மனுக்குப் பயம். வெட்டுகின்ற ஆட்களுக்குப் பயம். அல்லது அங்கு வடமராட்சி கிழக்கு சென்று ஒரு மூங்கிலையோ சவுக்கையோ நட்டார்களா. அதுவும் இல்லை.
 
செய்வது எல்லாம் சரி என்றில்லை
 
சிவாஜிலிங்கம் செய்வது எல்லாம் சரி என்று கூறுவதும் முட்டாள்தனம்.
 
1999 – 2009 காலப் பகுதியில் சிதம்பராவில் மாணவர் எண்ணிக்கை மிகப் படான், வாசல் பூட்டப் படலாம் என்றளவிற்கு பயம். சிதம்பரா தான் என்ற குறிக்கோளுடன் சில பல வேலைத் திட்டங்களை சிலருடன் சேர்ந்து முன்வைத்து நடத்தினார் சிவாஜிலிங்கம்.
 
அதில் ஒன்று தரம் 1 முதல் 5 வரை புதிய வகுப்புக்கள்.
 
இந்த முடிவால் பாதிக்கப்பட்டவை ஏனைய பாடசாலைகள்குறிப்பாக  அரியோட்டியும், ஆர் சியும். 
 
இன்னுமொன்றும் செய்ய முற்பட்டார், அதாவது சிவகுருவில் உள்ள தரம் 6 முதல் 10 வரையான வகுப்புக்களை நிறுத்துதல். இதன் மூலம் சிதம்பராவின் எண்ணிக்கையை கூட்டுதல். சிவகுருவைச் சேர்ந்த பலர் மிகக்கடும் எதிப்புத்தெரிவித்தார்கள், அதில் நானும் ஒருவன்.
 
எடுத்து எறிபவர் என்கின்றார்கள் சிலர். கோபக் காரர் என்கின்றார்கள் வேறு சிலர்.
 
ஆள் ஒரு அரசியவாதிதான்
 
ஆள் ஒரு அரசியவாதிதான் என்பதையும் சில நேரங்களில் செவி மடுப்பார் என்பதையும் அறியும் சந்தர்ப்பம் ஒன்று.
 
கடந்த 2 வருடங்கள் முன்பு பருத்தித்துறையில் பாரிய ஒரு மீன்பிடித் துறை முகம்  அமைப்பது தொடர்பான செய்திகள் வெளிவந்த நேரம். பதிவு போன்ற தமிழ்த் தேசியம் பேசும் ஊடங்ககள், தமிழ்த் தேசியம் என்ற ஒரே நோக்குடன் துறைமுக அபிவிருத்திக்கு எதிராக கருத்துக்களை விட்டிருந்தனர்.
 
அதாவது பருத்தித்துறையில் துறைமுகம் அமைப்பதன் நோக்கம் ‘மயிலிட்டியை’ இராணுவம் தொடர்ந்தும் தன்வசம் தக்கவைப்பதற்கு என்று. பதிவு, சிவாஜிலிங்கம் போன்றோர் எல்லாம் சிலவிடயங்களில் ஒரே மீடிறனைக் கொண்டவர்கள்.
 
இந்தச் சமயத்தில் ஒரு நாள் சிவாஜிலிங்கத்திடம் கதைத்துக் கொண்டிருந்த பொழுது, பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம் சம்பந்தமாக மேலே உள்ள கருத்தையே பிரதிபலித்தார் – அதாவது மயிலிட்டியை இராணுவம் தொடர்ந்தும் தக்கவைக்க இது ஒரு மாற்று நடவடிக்கை என்றார்.
 
அப்பொழுது நான் ‘அண்ணா தயவுசெய்து இதை நிறுத்தும் வகையில் ஒரு முயற்சியும் எடுத்து விடாதீர்கள், இது எமக்கு கிடைத்த வரப் பிரசாதம், இதை விட்டால், 700 மில்லியன் நிதியில் வடமராட்சியில் ஒரு வேலைத் திட்டம் எதிர்காலத்தில் கொண்டுவருவது என்பது கனவு ஆகிவிடும்’ என்றேன். அத்துடன் ‘இதை மயிலிட்டிப் பிரச்சனையுடன் ஒப்பிடாதீர்கள். இத்திட்டம் முழுக்க முழுக்க ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தது. மயிலிட்டி என்றோ ஒரு நாள் விடப்பட்டேயாகும்’ என்றேன். கேட்டுக்கொண்டிருந்தார்.
 
(மேற்குறித்த எனது எண்ணத்தை கருத்தை எனது Facebook இலும் பதிவிட்டேன். என் எதிர்ப்பு - அவ்வளவுதான். இது குறைந்தது பதிவில் செய்தி போட்டவர்களை கட்டாயம் போய்ச்சேர்ந்திருக்கும் என்பது திடம்).
 
ஒரு சில நாட்கள் கழிந்து, யாழ் பத்திரிகை ஒன்றைப் பார்த்தேன். அதில் புற்றளை மகா வித்தியால நிகழ்வு ஒன்றில், சிவாஜிலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதாயும், அங்கு அவர் உரையாற்றுகையில் ‘வட மாகாண சபை என்ன செய்தது என்று சிலர் கேட்கின்றார்கள். இங்கு பருத்தித்துறையில் 700 மில்லியன் நிதியில் துறைமுகம் ஒன்று அமைப்பதற்கு எங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றோம்’ என்றார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.!!!
 
தற்பொழுது மயிலிட்டியும் விடப்பட்டுள்ளது.
 
சிவாஜிக்கு எதிரான மாற்று அரசியல்
 
2009 ஆம் ஆண்டு யுத்தம் நின்று இயல்பு வாழ்க்கை ஆரம்பித்தவுடன், சிவாஜிலிங்கத்துக்கு எதிரான மாற்று (வல்வை) அரசியலுக்கான முயற்சி ஒன்று மிகவும் நூதனமான முறையில் முன்னெடுக்கப்பட்டது. அதே நூதன முறையைக் கையாண்டு அத்திட்டம் தடுக்கப்பட்டது. எனக்கும் சிறு பங்கு எனலாம். குறைந்தது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும்.
 
சிவாஜிலிங்கத்துக்கு  போட்டியாக ஒரு நாகரீகமான, காத்திரமான, நேர்மையான, உள்நோக்கங்கள் அற்ற ஒரு அரசியல் வருவது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டும். ஏனெனில் வல்வை அரசியல் என்பது, சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல.
 
ஏன் சிவாஜிலிங்கம் தேவை
 
தனக்கு என்று ஒன்றும் இதுவரை சேர்த்ததில்லை, இனிமேலும் சேர்க்கப்போவதில்லை. குடும்பம் உண்டு, பிள்ளைகள் இல்லை – ஆகவே பிள்ளைகளுக்கு என்று வாழ வேண்டிய அவசியம் இல்லை.
 
மனைவியின் குடும்பத்திற்கு என்று இதுவரை எதுவும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.
 
சிவாஜிலிங்கம் ஊழல் செய்துள்ளான், கொள்ளை அடித்துள்ளான் என்று யாராவது கூறுவார்களேயாயின் – இவை முற்று முழுக்க காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகத் தான் இருக்கும்.
 
(முட்டாள் தனமானது என்று பலர் கூறும்) ஜனாதிபதி தேர்தலிலும், குருநாகலில் MP தேர்தலில் போட்டியிட்டார்.  ஆனால் கட்சி மாறவில்லை. சுஜேட்சையாகவே போட்டியிட்டார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டபோது, நான் அவரிடம் கேட்டேன் ‘மிகப் பெரும்பாலானோர் பிழை என்கின்றார்கள், நீங்கள் ஏன் போட்டியிடுகிறீர்கள்’ என்று. அதற்கு அவர் கூறினார், “மகிந்தவும் எமது மக்கள் இறக்கக் காரணமானவர், பொன்சேகாவும் எமது மக்கள் இறக்கக் காரணமானவர், அப்படி எமது மக்கள் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு ஏன் எமது மக்கள் ஓட்டுப் போடவேண்டும். நான் வெற்றி பெறப் போவதில்லை என்பது வேறு விடயம். ஆனால் நாம் இவர்களை எதிர்த்து நிற்கின்றோம் என்று சர்வதேச சமூகத்திற்கு எமது எதிர்ப்பைக்காட்ட வேண்டும் அல்லவா’ என்றார்.
அன்னபூரணி மாதிரி
கப்பல் திரைநீக்கம்
ஆனால் எதிர்பார்த்தது போலவே தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்தைத் தூக்கி எறிந்தார்கள். சண்டை முடிந்த சூடான காலம் அது.
 
தமிழகத்தின் முன்னணி வார இதழான குமுதம், குறித்த ஜனதிபதி தேர்தல் பற்றி கவலையுடன் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை வெளியிட்டது. அதன் சாராம்சம் இது தான்.
 
“இறுதிக் கட்டப் போரை வழிநடத்தி ஏராளமான பொது மக்கள் அழிவிற்கு காரணமானவர்கள் என தமிழர் தரப்பிலும் சர்வதேச ரீதியாக குற்றம் சாட்டபடும் இருவரில் ஒருவருக்குத்தான் ஈழத் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் போர் ஓய்ந்து இரத்தம் இன்னும் காயாத நேரத்தில், விடுதலைப் புலிகளின்  ஆதரவாளர் எனப் பரவலாகக் கருதப்படும் ஒருவருக்குக் கூட வாக்களிக்க தமிழ் மக்கள் முன்வரவில்லை. மிகவும் வருந்தக் கூடிய விடயம். இனிமேல் ஈழப் பிரச்சனைப் பற்றி கதைப்பதில் பிரயேசனம் ஒன்றும் இல்லை” என்று.
 
இதர சில குறிப்புக்கள்
 
பிரபாகரனின் பெற்றோரை எவருமே வைத்துப் பார்க்க முன் வராத நேரத்தில் பராமரித்தவர். பிரபாகரனின் தந்தையார் இறக்க தாயாரை கொழும்பிலும் பின்னர் ஊரணி வைத்தியசாலையிலும் (Dr.மயிலேறும்பெருமாள் உதவியுடன்) வைத்துப் பராமரித்தவர். தாயாரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடாத்தியவர். இதற்காவும் கரி பூசப்பட்டவர்.
 
ஜனாதிபதி, பிரதமர்கள் என கறுப்புக் கொடி அது இது என்று பிரச்சனை செய்வார். ஆனால் கதைக்கும் பொழுது ‘கெளரவ ஜனாதிபதி’,  “கெளரவ நிதி அமைச்சர்” என்றுதான் (பேட்டிகளில்) கதைப்பார்.
 
ஊருக்குச் செய்தவற்றை கூப்பிட்டுச் சொல்ல மாட்டார். கேட்டால் மிக விபரமாகக் கூறுவார்.
 
விழாக்களுக்கு வந்தால் முடிந்தவரை விழா முடியும் வரை காத்திருப்பார்.
 
உதயசூரியன் அணைத் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வர விருப்பம் தெரிவித்த போதும், அணைக்கட்டை சிலர் சர்ச்சை க்கியதால் வரத் தயங்கிய முதலமைச்சரை உறுதி கொடுத்து வர வைத்தார். இதனால் போட்டி மேலும் பிரபல்யமடைய வழிவகுத்தார்.
 
என் மனதை நெருடிய சம்பவம்
 
கடந்த 2 வருடங்கள் முன்பு, கொழும்பில் இதய சத்திர சிகிச்சைக்காக வந்தார். பம்பலப்பிட்டி கிளிபோர்ட் பிளேசில் அமைந்துள்ள ரெலோ முதல்வர் ஸ்ரீகாந்தாவின் அலுவலக வீட்டில் தங்கியிருந்தார்.
 
பார்க்கச் சென்றேன். ஒரு அறையில் சிறிகாந்தாவின் உதவியாளர்கள் தங்கியிருந்தனர். அடுத்த அறையில் சிவாஜிலிங்கம், அழைத்துவந்திருந்த முன்னாள் வல்வை நகரசபை உபதலைவர் சதீஸ் உடன், கடையில் வாங்கிய காலை உணவை அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது அறையில் ஒரு கதிரைதான் இருந்தது.
 
சிவாஜிலிங்கம் அதில் என்னை வற்புறுத்தி அமர்த்திவிட்டு, சாப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து சாதாரணமாக கதைக்க ஆரம்பித்தார்.
 
சிவாஜிலிங்கம் மீது பரிதாபம் காட்டவேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. எமது இதர அரசியல் தலைவர்களில் ஒருவரை இவ்வாறான ஒரு கணத்தில் பார்க்கமுடியுமா என்று எண்ணிப்பார்க்கின்றேன்?
 
இதய நோயை விட சர்க்கரை நோய், கிட்னிப் பிரச்சனை, கண் பிரச்சனை, பிரஷர் என்று பல நோய்களின் சொந்தக் காரர் இவர். ஜெனீவாவில் இருந்து திரும்பிய பொழுது, சுகர் 400 க்கு மேல். வைத்தியர்கள் கட்டாய ஓய்வு எடுக்கக் கூறியிருந்தனர். இன்னும் எடுக்கவில்லை, ஏன் என்று கேட்க “எப்படி ஓய்வு எடுக்க முடியும்” என்கின்றார்.
 
அண்மையில் கொழும்பில் இவருடன் ஆட்டோவில் போக வேண்டி வந்தது. ஆட்டோ ஒன்றை மறித்து ‘இன்ன இடத்துக்கு போக வேண்டும்’ என்றார். ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. தனது ஆட்டோவில் வருவது சிவாஜிளிங்கம்தானா என்பதை அவரால் நம்பமுடியவில்லை.
 
சிவாஜிலிங்கத்தின் பின்னர்

அரசியலில் தமிழர் ஐக்கிய முன்னணி (Tamil United Front - TUF) ஸ்தாபகம், ஆயுத மற்றும் அரசியல் போராட்டத்தில்  தமிழீழ விடுதலை இயக்கம் உருவாக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கம் என – வல்வையின் மிக மிக நீண்ட அரசியல் பாதையில் பாரியதொரு வெற்றிடம் ஏற்படும்.
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

தொலைபேசி – 00 94 777 64 99 55 (Viber, Whats up)

மின்னஞ்சல்   - marinerathava@yahoo.com

Facebook - athiroobasingam.athavan


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: January 30, 2018 at 22:33 
சிறந்த தெளிவான பதிவு சிறப்பு ;

நா.விக்னேஸ்வரன் (ஐக்கியராட்சியம்) Posted Date: January 28, 2018 at 19:14 
ஆதவன் பக்கம் இன்று எல்லோராலும் எதிர்பார்புக்கும் பரபரப்புக்கும் நிறைந்த பக்கமாக இருக்கும் என்பதில் ஜயம் ஏதும் இல்லை. ஊரின்சேவகன் என்று ஆதவனால் அடையாளம் காட்டபடும் திரு சிவாஜிலிங்கம் தமழ் மக்களின் சேவகனாகவே கருதபடவேண்டும். அதுவே எமக்கு பெருமை உண்மையும் அதுதான்.

இக்கட்டுரையில் ஆதவனால் மேற்கோள் காட்டப்பட்ட விடயங்கள் அனைத்தும் உண்மையும் நடுநிலமையும் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

குமுதினி (இலங்கை) Posted Date: January 27, 2018 at 20:38 
ஆதவன் தம்பி! முதல் உங்களுக்கு எனது நன்றிகள் இக் கட்டுரை எழுதியதற்கு. அறியாதவர்கள் அறிவார்கள் இச்சேவகனைப் பற்றி .

நகுலசிகாமணி & உமா. (Canada) Posted Date: January 27, 2018 at 07:49 
தம்பி ! உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது. அவர் சந்தி வாசிகசாலையில் தலைவராக இருந்து நகரசபைத் தலைவராக பதவி வகித்து பாராளுமன்ற உறுப்பினராக வந்து, தற்போது மகாணசபை உறுப்பினராக உள்ளார். அவர் விரும்பியிருந்தால் மாகாணசபையிலாவது மந்திரிப் பதவி கூட எடுத்திருக்கலாம். அவர் அன்றிலிருந்து இன்றுவரை ரெலோ அமைப்பைச் சார்ந்தவர். இன்றுவரை கொள்கை மாறாமல் தமிழ் அரசியலில் இருப்பவர். வல்வெட்டித்துறை முதல் பட்டினசபை முதல் தலைவர் திரு.திருப்பதி கமீயூனிஸ்ட் அரசியல் சார்ந்து இருந்தவர். பின்பு திரு.க.சபாரத்தினம் (தமிழ்காங்கிரஸ்), திரு.நவரத்தினம் (கமீயுனிஸ்ட்) திரு.ஞரனமூர்த்தி அப்பா (தமிழரசு) என அரசியல் சார்ந்துதான் இருந்தார்கள். பல அபிவிருத்திகளும் நடந்தன. சிவாஜிலிங்கத்தின் கரத்தைப் பலப்படுத்துவதற்கு அவர்சார்ந்த அரசியல் குழுவை நகரசபைக்கு அனுப்புவுது சாலச்சிறந்தது.

நகுலசிகாமணி, உமா
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2024>>>
SunMonTueWedThuFriSat
123
4
567
89101112
13
14
15
16
17
18
192021
222324
25
26
27
28
29
30
31    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai