பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியை திறக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2017 (வியாழக்கிழமை)
பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியை மீனவர்களின் நன்மை கருதி உடனடியாக திறப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில்,
மயிலிட்டிப் பகுதியின் முக்கிய இடமாகத் திகழும் துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ள போதும், அப்பகுதியில் தொழில் புரியும் மீனவர்கள், பருத்தித்துறையில் இருந்து வந்து போவதற்கான ஒரே மார்க்கமாகத் திகழும் பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியை படையினர் இதுவரை விடுவிக்கவில்லை.
இவ்வாறு குறித்த வீதி படையினரின் பிடியில் இருப்பதனால் அதிக தூரம் பயணம் செய்தே மயிலிட்டியை சென்றடைய வேண்டிய அவலம் தொடர்கின்றது.
இதனை பலதடவைகள் சுட்டிக் காட்டியதன் பயனாக அவ் வீதியினை மக்கள் பயன் பாட்டிற்கு வழங்க படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதற்கமைய இவ் வீதியூடான போக்கு வரத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு இவ் வீதியூடான போக்கு வரத்து விரைவில் ஆரம்பிப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
மேற்கண்டவாறு தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கீழே படத்தில் மயிலிட்டி சந்தியை அண்மித்துள்ள பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியின் (மயிலிட்டி வீதி) ஒரு பகுதியைக் காணலாம். குறித்த பகுதியிலிருந்து வசாவிளான் வரையான சுமார் 4 கிலோமீட்டர் நீளமான - பலாலி விமான படைத் தளத்திற்கு வடக்காகச் செல்லும் பகுதி இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
குறித்த பகுதி பாதை மூடப் பட்டிருப்பதனால் பருத்தித்துறையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கீரிமலை வரையான - வல்வெட்டித்துறை ஊடான 763 இலக்க பஸ் சேவை கடந்த 30 வருடங்களாக தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.