வல்வையைப் பூர்வீகமாக கொண்ட செல்வி ஷர்மிளா வரதராஜ் இன்று லண்டன் Wandswoth council துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஷர்மிளா வரதராஜ் இன் பின்னணி.
University of Hertfordshire இல் சர்வதேச வர்த்தக கல்வியில் (International Business) மிகச் சிறந்த மாணவராக (Valedictorian) தெரிவான செல்வி ஷர்மிளா வரதராஜ், தனது மேற்படிப்புக்களை Florida, Switzerland, Thailand, மற்றும் Chile ஆகிய இடங்களில் மேற்கொண்டிருந்தார். அத்துடன் Harvard University இல் தனது சட்டப் படிப்பினையும் நிறைவு செய்துள்ளார்.
தனது மாணவப் பருவம் முதல் ஒரு மனித உரிமைகள் ஆர்வலராகப் பணியாற்றி வரும் இவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் British Tamil Forum உடனும் பணி ஆற்றி வருகின்றார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான Global Human Rights Defence உடனும் பணி புரிந்து வரும் இவர், தனது 21 வயதிலிருந்து nited Nations Human Rights Council இன் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகின்றார்.
பிரிட்டிஷ் அரசு மற்றும் இலங்கையில் தமிழர் பிரச்சனை குறித்து கரிசனை கொண்ட நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு எதிராக Human Rights Council இல் UN Resolution கலை கொண்டுவருவதற்கும் தனது பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.