வெள்ளவத்தை - பத்தரமுல்ல பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2020 (புதன்கிழமை)
வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை இன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடத்தில் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்தப் படகு சேவை ஆரம்பிப்பது தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் திட்டமிட்டிருந்தார்.
கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்த படகு சேவையின் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 30 நிமிடத்தில் செல்லக்கூடியதாக இருக்கும். காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த சேவை இடம்பெறும். ஆரம்பத்தில் நான்கு படகுகள் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.