உதயசூரியன் கடற்கரை உதைபந்தாட்டம் நிறைவு, நேதாஜி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2016 (வியாழக்கிழமை)
அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்த வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட கடற்கரை உதைபந்தாட்டம் நேற்று நிறைவடைந்து. போட்டியில் நேதாஜி விளையாட்டுக் கழகம் முதிலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
அறையிறுதி ஆட்டத்தில் ரேவடி B விளையாட்டுக்கழகம், இளங்கதிர் B விளையாட்டுக்கழகம், உதயசூரியன் A விளையாட்டுக்கழகம், நேதாஜி விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு கழகங்கள் பங்குபற்றின.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ரேவடி B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் B விளையாட்டுக்கழகம் மோதி இளங்கதிர் B விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உதயசூரியன் A விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதி நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது.
இறுதிப்போட்டியில் இளங்கதிர் B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 2:0 என்ற கோல் கணக்கில் நேதாஜி வெற்றி பெற்றது.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற கழகங்களுக்கு முறையே 15,000/-, 10,000/-, 5,000/- பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. 4 ஆம் இடத்தைப் பெற்ற ரேவடி அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியின் சிறந்த கோல்காப்பாளாராக ஜிவிந்தனும் ( நேதாஜி விளையாட்டுக்கழகம்), சிறந்த வீரராக தர்சனும் ( நேதாஜி விளையாட்டுக்கழகம்), சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகன் விருது – அன்புவிற்கும் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்) வழங்கப்பட்டது.
இரவு 10 மணி வரை நடைபெற்ற போட்டியைப் பார்வையிட ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
குறித்த நிகழ்வு எமது இணையதளத்தில் நேரடியாக ஒளி பரப்புச் செய்யப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.