வல்வை ரேவடியில் நடைபெற்ற “Beach Volleyball” - யாழ்மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் வெற்றி (படங்கள், காணொளிகள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2014 (வெள்ளிக்கிழமை)
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டிஇன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்றன.
இறுதிப் போட்டியில் பெண்களுக்கான ஆட்டத்தில் வவுனியா மாவட்டத்தை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டம் மோதியது. இந்த ஆட்டத்தில் கிளிநொச்சி மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆண்களுக்கான ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை எதிர்த்து மன்னார் மாவட்டம் மோதியது. இந்த ஆட்டத்தில் யாழ் மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த விருந்தினர்கள் blues pleasure boat இல் வல்வை கடலுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.