வல்வையின் எழுத்தாளர்களில் ஒருவரான வல்வையூர் அப்பாண்ணா என அழைக்கப்படும் திரு.அப்பாத்துரை (மாஸ்டர்) அவர்கள் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பற்றி எழுதிய 'சிவ சிவ' என்னும் நூல் இன்று மிகவும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்ட இந்த நூல் இன்று 17 ஆம் திகதி மாலை கோயிலில் இடம்பெற்ற பிரதோஷ பூஜை நிகழ்வுகளைத் தொடர்ந்து அடியார்களுக்கு வழங்கப்பட்டது.
'வழமையும் பழமையும்' என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இந்த நூலில் வல்வை சிவன் கோயிலைப் பற்றிய பல தகவல்கள் தகுந்த படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
கீழே முதலாவது படத்தில் நூலின் எழுத்தாளர் திரு.அப்பாத்துரை அவர்கள் நூலின் பிரதி ஒன்றை கோயிலின் தேவஸ்தான நிர்வாகிகளில் ஒருவரான திரு.சபாரத்தினம் சங்கர நாராயணனிடம் வழங்குவதைக் காணலாம். அருகில் தேவஸ்தான மூத்த நிர்வாகி திரு.சபாரத்தினம் ராமசாமி (அப்பு அண்ணா) அவர்களும், அப்பாத்துரை மாஸ்டர் அவர்களின் பாரியாரும்
இரண்டாவது படத்தில் கோயிலின் தேவஸ்தான நிர்வாகிகளில் இன்னொருவரான அருணாச்சலம் தியாகராசா அவர்களும் உள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: October 17, 2017 at 21:16
மகிழ்ச்சி. நன்றி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.