சந்நிதியான் ஆச்சிரமத்தால் வன்னியில் நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2024 (வெள்ளிக்கிழமை)
தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி - கோணாவில் கிழக்கை சேர்ந்த இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்க்கு வாழ்வாதார உதவியாக விவசாயம் மேற்கொள்வதற்கு ரூபா 260000/- பெறுமதியான ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைப்பதற்கான நிதியுதவி இன்று வழங்கப்பட்டதுடன் சுபநேரத்தில் ஆழ் துளைக்கிணறு அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளும் இடம்பெற்றது.
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையிலான தொண்டர்கள் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.