தேசிய உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகமானது கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சமுத்திரவியல் சார் துறைகளில் கௌரவ இளமாணிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களுள் ஒன்று.
இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டக்குளிப் பிரதேசத்தில் இயங்கும் இந்த பல்கலைக்கழகமானது 2017 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக தனது கல்விச் சேவையை வழங்கி வருகிறது.
சமுத்திரவியல் துறை என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் பிரபல்யம் வாய்ந்த துறையாகவே காணப்படுகிறது. இத்துறையில் வேலைவாய்ப்புகள் பல இடங்களில் பரந்து காணப்படுகின்றன. எமது மாணவர்களின் மனநிலையை குலைக்கும் ஒரு சில சக்திகளினாலும் மாணவர்களின் அச்சத்தினாலும் புதிய துறை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதில் பின்வாங்கிய நிலை காணப்படுகிறது.
இந் நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கற்கைநெறிகளும் சர்வதேச அளவில் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் ஐந்து கற்கைநெறிகள் உள்ளன. அவை....
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு நடைபெறும்.
உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் /இணைந்த கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் பாடப்பிரிவில் தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
இது போன்ற பல்கலைக்கழகங்கள் குறித்து மாணவர்கள் அறியாமல் இருப்பதன் விளைவாக பல மாணவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடுகிறது.
குறிப்பாக இப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதில் தமிழ் பேசும் மாணவ மாணவியரின் ஈடுபாடானது மிக மிகக் குறைவாகவே உள்ளது.
இப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் புதிய மாணவர் உள்ளெடுப்பிற்கான விண்ணப்பங்களைக் கோரும். இவ் விண்ணப்பங்கள் யாவும் இணையத்தின் மூலமாக சமர்ப்பிக்கப் படல் வேண்டும். (Online apply)
உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும்.
(ஒரு மாணவர் ஒரு கற்கை நெறிக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்)
இவ்வாறான பல்கலைக்கழகங்கள் தொடர்பான தகவல்களை இம்முறை உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான மாணவர்களிடம் சென்றடையச் செய்து பல்கலைக்கழக நுழைவைத் தவற விட்ட மாணவர்களையும் ஒரு பட்டதாரியாக மாற்றும் முயற்சியில் நாமும் பங்கு கொள்வோம்.
சமுத்திரவியல் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ வலைத்தள முகவரி பின்வருமாறு,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.