Prestige Falcon எண்ணெய்க் கப்பல் விபத்து – 2 வல்வையர்களை தொடந்தும் காணவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2024 (சனிக்கிழமை)
கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஒமானின் Duqm துறைமுகத்துக்கு அப்பால், சுமார் 25 கடல் மைல்கள் தொலைவில் கடலில் விபத்திற்குள்ளான "Prestige Falcon" என்னும் கப்பலிலிருந்து காணாமற்போன 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 கப்பல் ஊழியர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவப் பெயர்சிக் காலநிலை காரணமாக நிலவி வரும் கடும் கடல் கொந்தளிப்பு மற்றும் காற்று காரணமாக கடந்த திங்கட்கிழமை அதிகாலை குறித்த கப்பலுக்குள் நீர் புகுந்ததாகவும், இதனைத் தொடந்து கப்பல் ஒரு பக்கம் சாய்ந்து நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
(இடமிருந்து வலம் -வல்வையச் சேர்ந்த வைத்தியகுமார் கதிர்காமதாசன், தயாநிதி அப்பாசாமி)
கப்பலில் 3 இலங்கை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த மாலுமிகளும் 13 இந்திய மாலுமிகளும் பணி புரிந்துள்ளனர். இவர்களில் 10 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர் கடந்த புதன் கிழமை இந்திய கடற் படையினால் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்துள்ளார். மீட்கப் பட்டவர்களில் வல்வை சிவன் கோயிலடியைச் சேர்ந்த திரு. குகநேசன் மகேசதாசன் ஒருவர் ஆவார்.
வல்வையைச் சேர்ந்த கப்பலின் கப்டன் வைத்தியகுமார் கதிர்காமதாசன் (வயது 65), பிரதான பொறியிலார் அப்பாசாமி தயாநிதி (வயது 69) உட்பட்ட 6 மாலுமிகளை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
117 மீட்டர் நீளம் கொண்ட 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட "Prestige Falcon" எண்ணைதாங்கி கப்பல் ''கொமரோஸ்" நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: July 21, 2024 at 05:41
அனைவரும் பாதுகாப்பாக மீற்கப்பட இயற்கையையும் இறைவனையும் வேண்டுவோம்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.