இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்ளன.
இந்த நாணையக் குற்றிகள் மத்திய வங்கியிலிருந்து விநியோகிக்கப்பட்டதன் பின்னர் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அவை புழக்கத்திற்கு விடப்படவுள்ளன.
புதிய 10 ரூபா நாணயக் குற்றிகளின் முதலாவது தொகுதியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்திருந்தார்.
குறித்த குற்றிகளில் யாழ் மாவட்டத்தைப் பிரதிபலிப்பதாக நல்லூர் ஆலயம் இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.