4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014 (வெள்ளிக்கிழமை)
4 பிரிவு வகுப்புக்களை (Batch) நிறைவுசெய்யும் Cinec யாழ் கிளை (CINEC - Jaffna Branch)
வர்த்தக கப்பற் துறைகளிற்கான கற்கை நெறிகளை வழங்கும் Colombo International Nautical & Engineering College ( CINEC ) ஆனது 1992 இலிருந்தே கொழும்பில் தனது சிறப்பான கல்விச் சேவையினை வழங்கி வருகின்றது. இது இலங்கையில் வர்த்தக கப்பற் துறைகளிற்கான கற்கைநெறிகளை வழங்கும் கல்வி நிறுவனங்களின் வரிசையில் தனக்கென சிறந்த முத்திரையைப் பெற்றுள்ளது.
CINEC யாழ் கிளையின் தலைமை நிர்வாகி திரு.லிங்கேஸ்வரன் மற்றும் விரிவுரையாளர் ஒருவர்
CINEC ஆனது தனது சேவையினை முதலில் கொழும்பின் மட்டக்குளி (mattakkuliya) யிலும் பின்னர் மாலபே (Malape) இலும் பிரதான தளமாகக் கொண்டுள்ளதோடு திருகோணமலையிலும் சிறியளவில் இயங்கி வந்தது.
CINEC இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலகுவில் வர்த்தக கப்பற்துறை கற்கைநெறிகளை வழங்கும்நோக்குடன் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் பிரிவுக் கல்லூரியை (CINEC-Jaffna Branch) 2011 இன் ஆரம்பத்தில் நிறுவியது.
வடபகுதி மாணவர்கள் பல மைல்கள் தொலைவில் உள்ள கல்லூரிக்கு மிகுந்த பணவிரையத்துடன் அங்கேயே பலமாதங்கள் தங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
யாழ் CINEC கல்லூரி நிறுவியதன் நோக்கங்களுள் ஒன்றான, சிறந்த கப்பற்துறை கற்கைநெறிகளை வடபகுதி மாணவர்களுக்கு மிக அருகிலேயே வழங்குவது என்பது ஆகும். இதன் மூலம் மாணவர்களுக்கான பணவிரையமும் தொலைதூரம் என்ற பிரச்சினைகளுக்கும் குறிப்பிடக்கூடியளவு தீர்வு காணப்பட்டுள்ளது.
Navigation கற்கைநெறி மாணவர்கள்
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் இயங்கி வரும் CINEC யாழ்ப்பாணப் பிரிவானது, ஆரம்பத்தில் கற்கை நெறிகளை வழங்குவதற்க்கேதுவாக அமையப்பெற்றிருக்கவில்லை. இருந்தும் தொடங்கிய சில நாட்களிலேயே புதிய மாணவர்களை உள்வாங்கி ஆங்கிலம் மற்றும் கணனிக் கற்கைநெறிகளை வழங்கி வந்ததோடு, தம்மிடம் கப்பற்துறை கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை முதன்முதலாக 2012 ஆம் ஆண்டின் இறுதியில் திருகோணமலைக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களின் கற்கைநெறிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திகொடுத்தது.
இந்த வகையில் யாழ் CINEC இன் பயணமானது ஆரம்பமானது. பின்னர் உலோக உருக்கு ஒட்டுதல் (Welding) கற்கை நெறிகளை சகலவிதமான உபகரணங்களுடன் வழங்கிவருகின்றது.
யாழ் CINEC இன் அயராத முயற்சியின் பலனாக 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வர்த்தக கப்பற்துறை கற்கைநெறிகளான MOTOR MAN மற்றும் NAVIGATION கற்கைநெறிகளை யாழ்ப்பாணத்திலேயே வழங்குவதற்கான சகல அனுமதிகளையும் பெற்று புதிய வசதிகளுடன் புத்துணர்வுடன் செயற்படத்தொடங்கியது.
2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 4 பிரிவு மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு வர்த்தக கப்பற்துறை அனுமதிப்பத்திரமும் (CDC) பெற்றுக்கொடுக்க வழிவகைசெய்துள்ளது.
Motor man கற்கை நெறி மாணவர்கள்
MOTOR MAN மற்றும் NAVICATION கற்கை நெறிகளுக்கான விரிவுரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களும் யாழ் CINEC இல் வழங்கக்கூடியதாகவுள்ளதோடு எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகளையும் நடாத்தி வருகின்றது.
இருப்பினும் சர்வதேச கப்பல்துறை தீர்மானங்களுக்கு அமைவாக மேலதிக குறுகியகால கற்கை நெறிகளை (Modular courses) CINEC பிரதான கல்லூரியிலேயே தொடரவேண்டியுள்ளது.
ஆனாலும் இதற்கான கல்வி ஏற்பாடுகளோடு மாணவர்கள் தங்கிநிற்கக்கூடிய வசதிகளையும் CINEC யாழ்ப்பாணப் பிரிவே செய்துதருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருதனார் மடத்தில் மாணவர்களின் தங்குமிட வசதி
மாலபேயிலுள்ள பிரதான கல்லூரியைப்போன்று யாழ்ப்பாண பிரிவானது மிகுந்த கட்டுக்கோப்புடன் மாணவர்களை வழிநடாத்தி வட பகுதி மட்டுமல்லாது ஆரம்பத்தில் அதிகம் வல்வெட்டித்துறை மாணவர்களையே ஈர்த்திருந்த இந்த கல்லூரி இன்று யாழ்பாணத்தின் பிற பகுதி மாணவர்கள் உட்பட கிழக்கு மாணவர்களையும் ஈர்த்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வல்வையைச் சேர்ந்த அமரர் திரு.கா.ரஞ்சனதாஸ் அவர்களும் இக்கல்லூரியில் ஒரு விரிவுரையாளராக பணியாற்றியிருந்ததுடன், இக் கல்லூரியில் ஆரம்பத்தில் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை சேர்ப்பிப்பதில் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார் என்றால் மிகையாகாது.
CINEC யாழ் கிளையில் இதுவரை கற்கைநெறிகளை முடித்த மாணவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.