கிழக்காசிய கடலில் மோதி தீப்பற்றிய கப்பல் மாலுமிகளுடன் நீரில் மூழ்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2018 (புதன்கிழமை)
கடந்த 6 ஆம் திகதி சீனாவின் பிரதான துறைமுகமான ஷாங்காய்ற்கு கிழக்காக சுமார் 150 கடல் மைல்கள் தொலைவில் தென் சீனக் கடலில் (East china sea), ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணை தாங்கிக் கப்பல் ஒன்றும், கொங் கோங்கில் பதிவு செய்யபட்ட சரக்குக் கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு கப்பல்களும் மிகக் கடுமையாக சேதமடைந்தன..
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எண்ணை தாங்கிக் கப்பலில் பாரிய தீ ஏற்பட்டு வெடிப்புக்களும் ஏற்பட்டு அக்கப்பலில் இருந்த 32 மாலுமிகளும் காணாமல் போயிருந்தனர்.
தொடர்ந்து எரிந்துக் கொண்டிருந்த கப்பல், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு பக்கம் சரிந்து, பாரிய வெடிப்பு ஏற்பட்ட நிலையில் கடலில் மூழ்கி விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கப்பல் மாலுமிகள் அனைவரும் கப்பலுடன் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும், கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த எண்ணை மிதங்கக் தொடங்கியுள்ளது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் கிழக்கு ஆசிய கடலில் ஏற்பட்ட மிகவும் மோசமான சம்பவம் இது என கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.