வடபகுதிக்கான ரயில் சேவை மழை காரணமாக பாதிப்பு, காலை ரயில் மாகோவில் நிறுத்தப்பட்டுள்ளது (2 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2014 (சனிக்கிழமை)
வளிமண்டல குழப்பம் காரணமாக பரவலாக இலங்கை தீவின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பல பகுதிகளில் கடும்மழை பெய்துவருகின்றது. இதனால் இன்று காலை 05:10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்பாணத்துக்கான குளிருட்டப் பட்ட ரயில் சேவை மழை வெள்ளம் காரணமாக மாகோ ரயில் நிலையத்தில் (Maho railway station) தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த சேவை மீண்டும் 0940 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.