கொழும்பு துறைமுகத்தில் நின்ற கொள்கலன் கப்பலில் சில கொள்கலன்களில் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
கொழும்பின் South Asia Gateway Terminals (SAGT) கொள்கலன் துறைமுகத்தில் (Deep water Container Port) தரித்து நின்ற கொள்கலன் கப்பல் (Container Ship) ஒன்றின் கீழ் தட்டில் (Under deck) இருந்த சில கொள்கலன்களில் தீ ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குறித்த கொள்கலன் கப்பலில் கீழ்த் தட்டில் (Under deck) அடுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கொள்கலன்களில் ஒன்றில், சர்வதேச ரீதியாக தரம் 9 என வகைப்படுத்தப்பட்ட ஆபாத்தான பொருட்கள் (Dangerous Goods of Class 9) தொகுதியைச் சார்ந்த லிதியம் மின்கலங்கள் (Lithium batteries) இருத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலின் பெயர் CMA CGM Rossini பிரான்ஸ் நாட்டின் பிரபல CMA CGM கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இது 5 7 7 0 TEUS கொள்ளளவு உடையதாகும்.
கீழே படத்தில் கொள்கலன்களுக்கு இடையே தீயின் நிமித்தம் ஏற்பட்ட புகை வெளியே வருவதைக் காணலாம். சில தமிழ் இணையதளங்களில் செய்தி வருவது போல் குறித்த கப்பல் பற்றி எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.