கொழும்புத்தமிழ்ச்சங்க பட்டயக் கற்கைநெறி பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2015 / 2016) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
பேராசிரியர் சபா ஜெயராஜா (தலைவர் புலமைக் குழு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் M.S.மூக்கையா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மாலை 0430 மணியளவில் கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய வாசலில் இருந்து பட்டம் பெறவிருந்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் மங்கள வாத்தியங்களுடன் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
வி. கந்தசாமி தம்பதியினரினால் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து திருமதி ஹம்ஸானந்தி தர்மபாலன் அவர்களால் தமிழ் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தொடர்ந்து திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (கொழும்புத் தமிழ்ச் சங்கம் பொதுச் செயலாளர்) அவர்களினால் வரவேற்புரையும், சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா (கொழும்புத் தமிழ்ச் சங்கம்- தலைவர்) அவர்களினால் தொடக்கவுரையும், பேராசிரியர் சபா ஜெயராசா (புலமைக்குழுத் தலைவர் - தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி ) அவர்களினால் தலைமையுரையும், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா அவர்களினால் விருந்தினர் உரையும், சைவப்புலவர் சு. செல்லத்துரை (செயலாளர் -புலமைக்குழு தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி) அவர்களினால் கௌரவிற்பு உரையும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் சிறப்பம்சமாக பல்துறை வித்தகர் வித்துவான் ஆ.சபாரத்தினம் அவர்கள் 'தமிழ்நிதி' என்னும் விருது வழங்கிக்கௌரவிற்கப்பட்டார். விருதினை வித்துவான் ஆ.சபாரத்தினம் சார்பாக அவரின் மருமகனும் தினக்குரல் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருமான திரு.கரன் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்ற 18 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் "நாட்டிய கலாமந்திர்" மாணவியர் வழங்கிய தேமதுரம் என்னும் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
நிறைவாக நன்றி உரையை திருமதி வளர்மதி சுமாதரன் (கல்விக் குழுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்) வழங்கியிருந்தார்.
மாலை 0815 மணிவரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரங்க நிறைய விருந்தினர்கள் மாற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.