வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடி யே ற்ற த்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் தற்பொழுது நாட்டில் ஏற்பாட்டுள்ள கொரொனா தொற்று அச்சம் காரணமாக ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் சுகாதாரா நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் உற்சவ காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் கலந்து கொள்ளும் நிலையில் ஆலயப் பகுதியில் கொரொனா தொற்றினைக் கட்டுப் படுத்தும் முகமாக வல்வை நகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளி வீதிகளில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.