சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதிக்கு சீனாவின் பயணிகள் கப்பற்சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)
சீன அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் முன்னணி கப்பல் நிறுவனமான COSCO (State-owned China COSCO Shipping Corp) அடுத்த மாதம் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை தென் சீனக் கடலில் (South China Sea) சீனா உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய நிலப் பகுதியான Paracel Islands ற்கு மேற்கொள்ளவதாக China Daily newspaper செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் பணம் ஈட்டக் கூடிய வளங்கள் நிறைந்த தென் சீனக் கடலின் மொத்த 90 வீத பகுதியை சீனா தன்னுடையது என சொந்தம் கொண்டாடி வருகின்றது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலில் சில பகுதிகளை சொந்தங் கொண்டாடி வருகின்றன.
சர்ச்சைக்குரிய தீவும் உரிமை கொண்டாடும் நாடுகளும்
குறித்த தென் சீனக் கடல் பகுதியூடாக வருடம் ஒன்றிற்கு 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி
சீனாவின் கடலில் நிலத்தை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக ஒன்றாக அணிதிரளும் ஆசியான் நாடுகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.