33 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வடக்கில் சுங்கத் திணைக்கள பணியகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2017 (புதன்கிழமை)
வடக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணியகம் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்தப் பணியகம் காங்கேசன்துறையில் இந்த மாதம் திறந்துவைக்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியிருந்தன. சுமார் 33 வருடங்களாக வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமலிருந்தன.
வடக்கில் தற்போது நடைபெறும் கடத்தல் சம்பவங்களை கருத்தில் கொண்டு மீண்டும் சுங்கத் திணைக்களத்தின் பணியகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், வடக்கில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு, மன்னார் ஆகிய இடங்களில் சுங்கத் திணைக்களப் பணியகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.