வங்காள விரிகுடாவில் அதிதீவிர தாழமுக்கம், புயலாக மாறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2018 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் மத்திக்கு மேற்குப் பக்கமாக அதிதீவிர தாழமுக்கம் (deep depression) ஒன்று உருவாகியுள்ளது. இன்று முற்பகல் 11:30 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 7.60N மற்றும் நெட்டாங்கு 86.80E என்னும் புள்ளியில் நிலைகொண்டிருந்த குறித்த அதிதீவிர தாழமுக்கம் மணிக்கு 12 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து வருகின்றது.
அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர தாழமுக்கம் ஆனது பெரும்பாலும் புயலாக (cyclonic storm) மாறும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் உட்பட்ட சில சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் எதிர்வுகூறியுள்ளன.
தொடர்ந்து இதே திசையில் நகரும் அதிதீவிர தாழமுக்கம் ஆனது புயலாக மாறி இன்று நள்ளிரவு இந்தியாவின் ஓடிசாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையேயான கரையைக் கடக்கும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கீழே படங்களில் தாழமுக்கத்தின் செய்மதிப் படம் மற்றும் அதன் எதிர்பார்க்கப்படும் பாதை என்பன காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.