வாகன விபத்துக்களை தடுப்பதற்கு வாகன சாரதி புள்ளி முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2020 (வியாழக்கிழமை)
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும்.
இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும் போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்த்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.