செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கு நாளை பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2015 (புதன்கிழமை)
கதிர்காமத்தின் முருகன் கோயிலில் இடம்பெறும் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தையொட்டி வருடந்தோறும் யாழ்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் பாதயாத்திரை நாளை 21 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயிலில் இருந்து ஆரம்பமாகின்றது.
நாளை காலை சந்நிதி கோயிலில் இடம்பெறும் விசேட பூசையைத் தொடர்ந்து "வேல்" இணைப் பெற்றுக்கொண்டு பாதயாத்திரையில் ஈடுபடும் அடியார்கள் தமது பாத யாத்திரையை கதிர்காமம் நோக்கி ஆரம்பிக்கவுள்ளனர்.
54 தினங்கள் இடம்பெறும் இந்த பாதயாத்திரையில் பங்குபற்றும் அடியார்கள் வலிகாமம் கிழக்கு, தென்மராட்சி, கரைச்சி, முரசுமோட்டை ஊடாக எதிர்வரும் 30 திகதி முல்லைத்தீவையும், அதன் பின்னர் வற்றாப்பளை, கொக்கிளாய், புல்மோட்டை ஊடாக அடுத்த மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியைச் சென்றடைவார்கள்.
அங்கிருந்து தாந்தாமலை, பழுகாமம், மண்டூர், கல்லாறு, பாண்டிருப்பு,, கல்முனையூடாக 30 ஆம் திகதி காரைதீவையும், பின்னர் அங்கிருந்து அக்கரைப்பற்று, திருக்கோவில், சங்கு மண்கண்டி, பொத்துவில், பாணமை ஊடாக ஜூலை மாதம் 8 ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தைச் சென்றடைவார்கள்.
அங்கிருந்து குமுக்கன், வள்ளியம்மை ஆறு, வீரச்சோலை, செல்லக் கதிர்காமம் ஊடாக ஜூலை 16 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைவார்கள்.
ஆடிவேல் உற்சவம் ஜூலை 16 ஆம் திகதி கொடிஎர்ரத்துடன் ஆரம்பமாகவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.