திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் உல்லாசப்பிரயாணிகள் ஆகியோர் ஆலயத்தினுள் செல்லும் போது இந்து மத ஒழங்குகளை கடைப்பிடிக்குமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
அண்மைக் காலமாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அதிகமான உள்ளுர் உல்லாசப் பயணிகளும் வெளிநாட்டு உல்லாசப்பயயணிகளும் வருகை தருவதனால் கலாச்சாரம் அல்லாததும் ஆலய ஒழங்கிற்கு புறம்பானதுமான ஆடைகளுன்
வருகை தருபவர்களை நிர்வாகம் அனுமதிக்காது என அறிவித்துள்ளது.
மேலும் ஆலயத்தின் விசேட பூசை நேரங்களில் ஏனைய மத காலாச்சார உடைகளுடனும் தொலைபேசி பாவனையும் இடம் பெற்றுவருவதால் ஆலயத்தின் புனிதம் பாதிக்கப்படகிறது.
சகல மதத்தவர்களும் இவ்வாலயத்திற்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆலய ஒழுங்கிற்கு எற்ப ஆலய தரிசத்தை மேற் கொள்ளுமாறு ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் திருகோணமலை மற்றும் வடகிழக்கில் உள்ள ஏனைய பிரபல ஆலயங்களில் ஆண்கள் மேலாடை அணிந்து ஆலயத்தினுள் செல்வதற்கு தடை உள்ளபோதும் திருக்கோணேஸ்வரத்தில் இந்த கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.