வல்வையில் மரவளர்ப்பை மாணவரிடையே ஊக்குவிக்க புதிய முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2016 (திங்கட்கிழமை)
வல்வையில் மரம் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க வல்வை சனசமூக சேவா நிலையம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. தாம் விரும்பும் 2 மரக் கன்றுகள் வீதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களின் பின்னர் குறித்த மரங்களின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி என்பன கண்டறியப்பட்டு திறைமையாக மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படவுள்ளார்கள்.
இதற்கமையை நேற்றைய தினம் சுமார் 65 மாணவர்கள் யாழ் ஊரெழுவில் அமைந்துள்ள நியூ லங்கா பாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மரம் வளர்ப்பு பற்றி விளக்கங்கள் கொடுக்கப்பட்டு தாம் விரும்பிய 2 மரங்களும் கொடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வல்வை சனசமூக சேவா நிலைய உறுப்பினர்கள் மற்றும் சில நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: May 31, 2016 at 13:23
மிக சிறந்த செயல் எக்காலத்துக்கும் பயன்தரும் செயல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !இயற்கையை பாதுக்காத்தால் எதிர்கால தலைமுறை குழந்தைகளின் வாழ்கை ஆனந்தமாகவும் மகிழ்வாகவும் இருக்கும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.