2023/2024 ஆம் ஆண்டுகளில் LDSP திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் 2023.09.25 திங்கட்கிழமை மற்றும் 2023.09.30 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் பி.ப 2.00 மணிக்கு வல்வெட்டித் துறை நகர சபையின் மரக்கறிச்சந்தைக்கு மேலேயுள்ள பொதுமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் பொதுமக்களையும் பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு வல்வை நகரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.