வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இன்று 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இவ் இரத்ததானமானது நண்பகல் 12.00 மணிவரை நீடித்திருந்தது. இவ் இரத்ததான முகாமில் பெண்கள் உட்பட சுமார் 30 ற்கும் அதிகமானோர் பங்குபற்றி இரத்தக் கொடையினை வழங்கியிருந்தார்கள்.
வல்வெட்டித்துறையில் இதுபோன்ற இரத்ததானம் முகாம்கள் பல்வேறு அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த கால இடைவெளியில் நடாத்தப்பட்டு வருகின்றமை சிறப்புக்குரிய விடயமாகும்.
இவ் இரத்ததான முகாமிற்கு ஸ்ரீலஷ்மி பவன் சைவ உணவகம் அனுசரணை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.