நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் தொண்டமானாற்றைச் சேர்ந்த 26 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், கொரொனா சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிற்கும், மேலதிகமாக தொழில் வாய்ப்பை இழந்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் 3 குடும்பங்கள் உள்ளடங்களாக 30 குடும்பங்களுக்கு தலா 3,000.00 ரூபா ( 3,000×30 = 90,000) பெறுமதியான உலருணவு பொருட்கள் தொண்டைமானாறு நற்பணி மன்றத்தினரால் நேற்று (05.06.2021) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. .
குறித்த உலருணவு பொதிகள் தொண்டமானாறு J /384 கிராம சேவகர் பிரிவு அதிகாரியின் தலைமையில் நேற்று மாலை கிராம சேவகர் அவர்களின் தெரிவுகளின் அடிப்படையில் 23 பொதிகளும் பிரத்தியேகமாக தொண்டைமானாறு நற்பணி மன்றத்தினரின் தெரிவில் 7 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 30 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.