உங்கள் வீட்டிலோ அருகிலோ வசிக்கூம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துங்கள்
நாட்டுக்கு பெறுமதியான 10000 நூல்கள்
அன்புக்குரியவர்களே,
தற்போது உலகம் முழுதும் பரவியுள்ள கோவிட் 19 நோய் காரணமாகவே 41 லட்சத்துக்கு அண்மித்த பாடசாலை மாணவர்கள் தமது வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றாரகள். இந்த மாணவர்களின் மன தைரியத்தை விருத்தி செய்வதோடு சவால்களை வெற்றி கொள்ளும் சக்தியை விருத்தி செய்யும் நோக்கில் கல்வி அமைச்சு இலங்கை தேசிய நூலக சபையோடு இணைந்து பத்தாயிரம் நூல்களை எழுதும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அன்புக்குரிய பாடசாலை மாணவர்கள் தற்போது உலகில் பரவியுள்ள துரதிஷ்ட நிலைமை காரணமாக வீட்டுக்குள்ளேயே காலம் கழிக்கிறார்கள். நூல்களை வாசித்து இக் காலத்தில் தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது . நூல்களை வாசிக்கும் மாணவர்களை மேலும் செயற்பாடுகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் .
அது நூல்களை எழுதுவதாகும். இந்த அனர்த்திடையே உங்களுடைய படைப்பாற்றலை மேம்படுத்த எழுதுவதற்கு ஆரம்பிப்போம் .
நீங்கள் இப்போது எழுதும் நூல் பாடசாலை ஆரம்பித்த பின் ஆசிரியர்களால் மீண்டும் திருத்தப்பட்டு அதிபர் ஊடாக தெரிவுசெய்து வலய கல்வி பணிப்பாளருக்கு அனுப்ப அவர் சிறந்தவற்றை மாகாண மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்புவார். மாகாண பணிப்பாளர் அவற்றில் சிறந்தவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்புவார்.
அதற்கமைய கல்வி அமைச்சு 10,000 நூல்களை தெரிந்து வெளியிடும். குறைந்தது ஒரு பாடசாலையிலிருந்து ஒரு நூலாவது முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நியதிகள் :
1. வயது பிரிவினர் தரம் 1 தொடக்கம் 13 வரை
2.சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்வைக்கப்படலாம்.
3. நூல் வகைகள்
* சிறுகதைகள்
* கவிதைகள்
#இளையோர்இலக்கியப்படைப்பு
* சிறுகதை
* நாவல்
* நாடகம்
#மொழிபெயர்ப்பு
* வரலாற்று கதை * மாயஜாலக்கதை
* சாகச கதை
* துப்பறியும் கதை
* நீதி உவமை கதை
* நாட்டார் கதை
#விஞ்ஞானபடைப்புகள்
* சுற்றாடல் விவரணம்
* சரிதை
* சுயசரிதை
* தேவதை கதை
* சமயக்கதை
* வீரதீர கதை
*பாடங்கள் தொடர்பான நூல்கள்
* வாய்மொழி மூலமான பண்டைய கதைகள் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் .
5. சிறுகதை ணறதொகுப்பாயின் 05க்கும் குறையாத கதைகள் கொண்டிருத்தல் வேண்டும்.
6. கவிதை தொகுப்பாயின் 20க்கு குறையாத 50க்கும் மேற்படாத கவிதைகள் இருக்க வேண்டும்.
7. நாவலாயின் கணணி பதிவில் ஏ4 தாளில் குறைந்தது 120 பக்கங்கள் வேண்டும்.
8. சிறுவர் நூல்கள் குறைந்தது16 பக்கங்கள். ஏனையவை 49 -150க்கும் இடையான பக்கங்கள்.
9. 10ந்தர மாணவர்கள் வரையானவர்கள் சிறுவர் கதைகள் ஆக்கலாம். இந்நூலில் வர்ண பக்கங்கள் மற்றும் சித்திரங்கள் காணப்படலாம் .
10. எல்லா நூல்களும் ஏ4 தாள்களில் முன்வைக்கப்பட வேண்டும்
11. நூல்கள் அனைத்தும் கணணி எழுத்துருவாக்கத்தில் இருத்தல்
வேண்டும்.
12. நூல்கள் வன்பிரதிகளிலும் மென்பிரதிகளிலும் பேணப்பட வேண்டும்
13. புகைப்படங்கள் கறுப்பு வெள்ளை அல்லது 4 வர்ணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் . புகைப்படத்தில் தனிநபர் அடையாளம் தெரியாமல் முகங்கள் கருமைப்படுத்தப்பட வேண்டும்.
14. உண்மையான பெயர் இடங்களும் கூடியதான படைப்புகள் கூடாது அனைத்து பெயர்களும் புனைவாக இருத்தல் வேண்டும்
15 .சிறுவர் கதைகள் எழுத்துரு அளவில் 14 ஆக இருத்தல் வேண்டும். ஏனையவை 12 அளவில். வரிகளுக்கிடை இடைவெளி 1.5 கொண்டதாக இருத்தல் வேண்டும்.
16. தலைப்புக்கும் வரிகளுக்குமான கணணி திரைக்கு அமைவாக 2 இடைவெளி இருத்தல்
17 . எழுதும் பக்கத்தின் விளிம்புகள் இடது பக்கம் 1.5" எஞ்சிய மூன்று விளிம்புகளும் 1.0" (கணணி உதவியுடன்)
18. எழுத்து வகை iskolepotha
ஆக இருக்க வேண்டும்.
20 . வெளி அட்டை வர்ண புகைப்படம் அல்லது ஓவியத்தை கொண்டிருக்க வேண்டும்
20. கவிதை நூல் சித்திரங்களுடன் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்றாலும் clip art லிருந்து படங்கள் எடுக்க கூடாது
21 .வன்பிரதிகள் wire binding செய்யப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும். மென்பிரதிகள் இறுவட்டில் CD முன் வைக்கப்பட வேண்டும். மாகாண கல்விப் பணிமனை ஊடாக தெரிவு செய்யப்படும் மென் பிரதிகள் மின் அஞ்சல் முகவரிக்கு Pdf ஆவணமாக அனுப்பப்பட வேண்டும்
22 . பாடசாலைகளால் முன்வைக்கப்படும் அனைத்து பிரதிகளும் மென் பிரதிகளாக பாடசாலை அமைந்துள்ள வலயக் கல்விப் பணிக்கு மின்னஞ்சல் செய்யப்படவேண்டும்
23 .பிறிதொருவர் வெளியிட்ட ஏதேனும் விடயங்கள் அனுமதி இன்றி வெளியிடக் கூடாது. பிறிதொருவர் ஆக்கத்தை முன்வைக்கக் கூடாது
24 . தரம் 11 தொடக்கம் 13 வரை பிரிவினர் பாட விடயங்கள் தொடர்பான நூல்களை செயல் திட்டங்களை ஆய்வுகளை முன்வைக்க முடியும்
25 . அவ்வாறான நூல்களை முற்படுத்தும் மாணவர்கள் 26 தொடக்கம் 29 வரையான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்
26 . பாட விடயங்கள் தொடர்பான நூல்கள் தெளிவுபடுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் புகைப்படங்கள் ஓவியங்கள் உள்ளடக்க முடியும்
27. அக்குழுவினர் முன்வைக்கும் நூல்களிடையே செயல் திட்டம் ஆய்வு முன்வைக்கப்படுமாயின் அதற்கான அனுமதி உண்டு அதற்கான ஒழுக்கநெறி உங்களால் பின்பற்றப்பட வேண்டும்
28 .பிரித்தெடுப்பு காட்டப்பட வேண்டும். அதற்கான உசாவிய நூல் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் உசாவிய நூல்களை வெளிப்படுத்த APA முறை அல்லது Haward முறை ஆகியவற்றில் இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் .
உதாரணம் :
எழுத்தாளர் பெயர் - பி. தேனபது
வருடம் 1959
நூலின் பெயர் -சிங்கள படைப்பு மற்றும் இலக்கிய நயம்
வெளியீட்டாளர் -கொழும்பு அப்போதிகரிஸ் நிறுவனம்
வெளியிட்ட நகரம் - கொழும்பு
இந்த தகவல் அடிப்படையில் நூல் பட்டியல் பின்வருமாறு குறிப்பிடப்படவேண்டும்
தேனபது, பி ( 1959) சிங்களப்படைப்பு மற்றும் இலக்கிய நயம், கொழும்பு: அப்போதிகிரீஸ்
29 . பிறிதும் இணைப்புகள் காட்டப்படும் போது அந்த இணைப்புகளுக்கு இலக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள் அந்த இலக்க தொடரொழுங்குக்கு ஏற்ப
அந்த இணைப்பின் இலக்கம் தேவையான சந்தர்ப்பங்களில் தேடிக் கொள்ளும் வகையில் ஒழுங்கமைப்பின் நூலில் தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும்
30. நூலின் தொடரொழுங்கு பின்வருமாறு பேணப்படவேண்டும்
1. முதலாம் பக்கம் தலைப்பு எழுத்தாளர் பெயர் முதற்பக்க ஓவியம் என்பதோடு இருக்க வேண்டும்
2. இரண்டாவது முதல் பக்க முன்னட்டை பக்கத்துக்கு மேலதிகமாக விதமான முதற்பக்கத்தில் தயாரிக்கும் புத்தக எழுத்தாளர் பெயர் வெளியீட்டாளர் கொண்டதாக இருக்க வேண்டும்
3. சமர்ப்பணம் உங்களுக்கு தேவையான வருக்கு சமர்ப்பிக்கலாம் எனது நூல் ..........அவர்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது என்றவாறு அமைய வேண்டும்
4. நன்றி -இந்த நூலில் வெளிவர உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க பயன்படுத்தவும் ஒரு பக்கத்திற்கும் மேற்படக்கூடாது
5. முன்னுரை -நூல் மற்றும் எழுத்தாளர் குறித்து எழுதப்படும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும்.
6 . உள்ளடக்கம் - பிரதான தலைப்பு உப தலைப்புகளுடன் பக்கங்கள் காட்டப்படவேண்டும் சிறுவர் கதைக்கு இது தேவையில்லை. இது வரையான பக்கங்கள் ரோமன் இலக்கத்தில் காட்டப்பட வேண்டும். இதற்கு அடுத்த பக்கங்களை அரேபிய இலக்கத்தில் காட்ட வேண்டும்
7. அத்தியாயம் அல்லது பாகம் - முதலாம் அத்தியாயம் அல்லது முதலாம் பாகத்தில் இருந்து இறுதி அத்தியாயம் இறுதி பாகம் வரை தொடர வேண்டும் அது உங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டு தெளிவாக காட்ட வேண்டும் .
பொது நியதிகள்
============= =
* #மே22க்கு முன் நூல்கள் ஆக்கப்படல் வேண்டும்
பாடசாலை குழுவினால் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு *#June10 க்கு முன் அனுப்ப வேண்டும் . சிறந்தவற்றை அவர் *#June15க்கு முன் மாகாண பணிப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் .
*#June25 ஆம் திகதியளவில் மாகாண பணிப்பாளர் கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்க வேண்டும்.
முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்படும் 10,000 நூல்கள் மின்னூல்களாக்கப்பட்டு மின்னூலகத்தில் வைக்கப்படும்
தகுதி பெற்ற பரிந்துரைக் குழுவினர் 100 நூல்களை தெரிவு செய்த பின் அவை பதிப்பிக்கபடுவதோடு அரச விருதும் வழங்கப்படும்.
இந்நூல்கள் கல்வி அமைச்சாலும் தேசிய நூலகத்தினாலும் அச்சிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இம்முழு செயற்பாடுகளும் கல்வி அமைச்சு மற்றும் தேசிய நூலகத்தினால் இணைப்பாக்கம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.