பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கண்காட்சி தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த நிகழ்வில் விருந்தினார்களாக வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு.வை.ரவீந்திரனும், வடமாகாண கல்வி பனிப்பாளார் (விஞ்ஞானம்) அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
கல்விக் கண்காட்சி பின்வரும் பாடத்துறைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழினுட்பம், எந்திரவியல் தொழினுட்பம், உயிர் முறைமைகள் தொழினுட்பம், தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம், இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், வணிகக்கல்வி, தமிழ், வரலாறு, புவியில், சுகாதாரமும் உடற்கல்வியும், ஆங்கிலம், சித்திரம், சங்கீதம், சமயம், கிறிஸ்தவம், செய்முறைத் தொழினுட்பம்....
மேலும் தொங்குபாலம், பாய்மரக் கப்பல், கடலில் மூழ்கிய அலெக்ஸாண்ட்ரியா நகரம், துறைமுக நகரம், பேய் வீடு, நீர்வீழ்ச்சி, குளம், டைனோசர், இலங்கையின் தரைத்தோற்ற அமைப்பு, ஐவகை நிலம், புராதன குடிசை, கம்பி வட ஊர்தி, பொம்மலாட்ட அரங்கு, Hydroponic Model என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழினுட்ப பிரிவில் பின்வரும் விடயங்களை நீங்கள் பார்வையிடலாம்.
IOT Devices, Smart Home, Smart Road, Smart Gardening, Smart Dustbin, CNC Ploter, POV Display, LED Matrix, Automatic Water Dispenser, Obstacles Avoding Car, Automatic Fan Locker, Height Measurement, Line Following Car, Welcome Robot, Tea dryer, Gas Leakage Detector, Holography, VR Box, Gaming Zone, Hardware, E-Library, E-Lerning, Mobile Apps, Web Apps, etc...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.