எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2024 (திங்கட்கிழமை)
உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று Informa Connect Academy, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் ரெஸ்லா கார் நிறுவன உரிமையாளர் , விண்வெளிக்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் ரொக்கெட்டுக்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு வணிக வாகன தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளம், ஸ்ரார் லிங் செய்மதி இணைப்பு நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் உள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ரெஸ்லா நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Informa Connect Academy தெரிவித்துள்ளது.
அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் வணிக நடவடிக்கைகளில் மின் உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் முனையங்கள், விவசாயம் மற்றும் பொது தளபாடங்கள், தொழில் பூங்காக்கள் நீர் சுத்திகரிப்பு' வீதி மற்றும் ரயில் நெட்வொர்க்குகள், தரவு மையங்கள், விவசாயம், உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 பில்லியன் டொலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86 வீதமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (facebook) , அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033 க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.