"லங்கா ராணி" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் தோழர் அருளர் (அருட்பிரகாசம்) அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார்.
ஈரோஸ் அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் தோழர் அருளர் அவர்கள் மிக முக்கியமான ஒருவராவார்.
இலங்கையிலிருந்து வெளிவந்த போரிலக்கிய நாவல்களில் "லங்காராணி " குறிப்பிடப்பட வேண்டியதாகும். 1978 ல் பதிப்பான இதனை எழுதியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆங்கில POP பாடகி மாதங்கி அருள்பிரகாசத்தின் (M I A) தந்தையுமான அருளர்தான். தமிழ் ஆயுதப் போராட்டத்தின் தேவையை பேசிய முதல் நாவல் இதுவென கூறலாம்.
77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது 'லங்கா ராணி'. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.
ஈழப்போராட்ட வரலாற்றோடு இணைந்திருந்த“கன்னாட்டி” பண்ணைக் குரியவர்.1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்.
லண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்
'லங்கா ராணி' நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல். இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.