கொழும்புக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டிருந்த கொள்கலன் கப்பல் 'X-press-pearl' இல் கடந்த 2 தினங்கள் முன்பு தீ ஏற்பட்டது. குறித்த தீயானது இலங்கை கடற்படை மற்றும் கரையோர காவற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை குறித்த கப்பலில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக கப்பலில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
கப்பலில் 25 டொன் எடை கொண்ட நைத்திரிக் அமிலம் (nitric acid) உள்ளதாலும் கப்பல் தொடர்ந்து எரிவதாலும் கப்பலை இலங்கையின் கரையிலிருந்து 50 கடல் மைல்கள் அப்பால் கொண்டு செல்ல இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் தற்பொழுது ஆரம்பித்துள்ள தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு மற்றும் அசாதாரண காற்று காரணமாக குறித்த முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.