Facebook, Google, Twitter போலிக் கணக்குகளுக்கு இனி கடுமையான நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2022 (வெள்ளிக்கிழமை)
போலிக் கணக்குகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க சகல சமூக ஊடக வலைத்தளங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக Reuter செய்தி வெளியிட்டுள்ளது
இதில் மெட்டா, கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, போலிக் கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் European Union code of practice அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.