கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ நேற்று தனது 90 ஆவது வயதில் காலமானார். 1926ல் கியூபாவில் கோல்குயின் மாகாணத்தில் விவசாய குடும்பத்தில் காஸ்ட்ரோ பிறந்தார். 1945ல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்லூரி பயிலும்போதே அரசியலில் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
அமெரிக்காவின் தெற்கு கடல் பகுதியில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கியூபா. 1959ல் காஸ்ட்ரோ கியூபா அதிபரானாதும் அவரை தன்வசப்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்சி தோற்றது. பதவியில் இருந்து காலம் முழுவதும் அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கினார் காஸ்ட்ரோ.
இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டு இருந்தார்.இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். பிடல் காஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
யார் இந்த பிடல் காஸ்ட்ரோ?
உலக அளவில் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசக் கொள்கை எனும்பொ துவுடமை கொள்கை காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்தான் இன்றைய தினத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியும், புரட்சியாளருமான சே குவேராவின் உயிர்த் தோழர் ஆவார்.
கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு அம்மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.