வல்வெட்டிதுறையில் நீச்சல் தடாகம் அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவேன் - அமைச்சர் மங்கள சமரவீர உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சிறுவர் நீச்சல் தடாகமொன்றை அமைக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்தின் திறப்பு விழா நடைபெற்ற வேளையில் திறக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் 2,3 மற்றும் 4 கட்ட வேலைகளுக்கு நிதி ஒதுக்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரினார்.
இதற்கு அமைச்சர் மங்கள சமரவீர மேற்படி எல்லா வேலைகளையும் ஒரேயடியாக மேற்கொள்ள முடியாதெனவும் இதற்கு நிதி நெருக்கடியே காரணமெனவும் பதிலளித்தார்.
இந்நிலையில் 2 ஆம் கட்ட வேலையான சிறுவர் நீச்சல் தடாகத்தை அமைக்க 5 கோடியை ஒதுக்குமாறு எம்.கே.சிவாஜிலிங்கம் கோரினார்.
இதற்கு இவ்வருட நவம்பர் மாதம் முன்வைக்கவுள்ள வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்தார். இதே வேளை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை இயங்க வைக்க மேலதிக பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நீச்சல் தடாகம் அமைக்கும் ஒப்பந்தக்காரரிடம் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.
மேற்கண்டவாறு தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியீட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.