இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதைகளைக் கொண்ட முதல் நகரமாக யாழ்பாணம் அமையவுள்ளது. உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ் நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள் முக்கிய அரச அலுவலகங்களை இணைக்கும் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை அமைக்கப்படவுள்ளது.
20 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாதையூடாக யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சுற்றுலாத் தலங்களையும், சுற்றுலாப் பயணிகள் இலகுவாக சென்று பார்வையிடுவதுடன், இதனூடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு சுற்றுலாத்துறையும் வளர்ச்சி காணும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது.
மேலும் சைக்கிள் பாவனையை பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடிவதுடன் பாடசாலை மாணவர்கள் இதனூடாக பெரு நன்மையடயவுள்ளர்.
தற்பொழுது நாள் ஒன்றுக்கு பல்வேறு தேவைகள் நிமித்தம் ஒரு லட்சத்து நாப்பதாயிரம் வரையான பயணிகளும் 30 ஆயிரம் வரையான மோட்டார் சைக்கிள்களும் யாழ் நகருக்குள் வந்து செல்லும் நிலையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் போக்குவரத்து நெரிசல்கள் குறைவதோடு பிரத்தியேக சைக்கிள் பாதை அமைப்பதால் விபத்துகளும் குறையும் என எதிர்பார்க்கபடுகின்றது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.