கடலில் 7 பேரைக் காப்பாற்றி உயர் விருதைப்பெறும் பெண் கப்டன், இந்தியாவின் முதலாவது பெண் கப்டனும் இவரே!
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2016 (சனிக்கிழமை)
சீரற்ற கடலில் நீர் உட்புகுந்து கடலுக்குள் தாண்டு கொண்டிருந்த மீன்பிடிக் கப்பல் ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காப்பாற்றியதற்காக Sampurna Swarajya என்னும் எண்ணை தாங்கிக் கப்பலின் கப்டன் ராதிகா மேனன் (Captain Radhika Menon) என்பவருக்கு 2016 ற்கான IMO (International Maritime Organization) வின் சிறந்த விருது 'Exceptional Bravery at Sea' ற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் வங்காள விரிகுடாவில் மிகவும் கடினமான இந்த உயிர் காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவே IMO கவுன்சிலின் 116 ஆவது கூட்டத் தொடரில் குறித்த விருது வழங்கும் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகக் கப்பல் துறையில் முதாலாவது பெண் கப்டனும் கப்டன் ராதிகா மேனன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.